» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
நெசவாளர்களை ஆதரிக்கக் கைத்தறிப் பொருட்களை வாங்குங்கள்: பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள்!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 4:44:44 PM (IST)

தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு பொதுமக்கள் அனைவரும் கைத்தறிப் பொருட்களை வாங்க வேண்டும் என்றும், நெசவாளர்களுக்கு ஆதரவாகச் சமூக வலைதளங்களில் வீடியோக்களைப் பகிருமாறும் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது: "பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தின் ஒரு பகுதியாக, 1905-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7-ஆம் தேதி சுதேசி இயக்கம் தொடங்கியது. இந்த இயக்கம் நாடு முழுவதும் உள்ள மக்களை ஒன்றிணைத்து, இந்தியாவின் தன்னம்பிக்கையின் சின்னமாக மாறியது.
சிறிய வீடுகளில் இருந்து பணியாற்றி, பலவகையான கைத்தறித் துணிகளை உருவாக்கும் நாட்டின் நெசவாளர்களைக் கௌரவிப்பதற்கான ஒரு சிறந்த வாய்ப்பு இந்நாள். பொதுமக்கள் அனைவரும் குறைந்தது ஒரு கைத்தறிப் பொருளையாவது வாங்கி, அதை விளம்பரப்படுத்தும் வகையில் வீடியோ பதிவு செய்து இணையத்தில் பகிர வேண்டும் எனவும், அது மற்றவர்களையும் இத்துறைக்கு ஆதரவளிக்கத் தூண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், "தன்னிறைவு பெற்ற இந்தியாவை உருவாக்குவதே நமது முதன்மை இலக்கு. அதற்காக, மிகச்சிறிய மற்றும் ஏழ்மையான குடும்பங்கள் கூட பொருளாதார ரீதியாக வளம் பெற வேண்டும். மக்களின் ஆதரவு, இந்திய நெசவாளர்களின் திறமையையும் கைவினைத்திறனையும் உலகிற்கு வெளிக்காட்ட உதவும். இந்தியாவின் கைத்தறிப் பொருட்களைப் பிரபலப்படுத்துவோம்; அவற்றைப் பயன்படுத்தத் தவறக்கூடாது" என்று பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

டீப்ஃபேக் மற்றும் போலி தகவல்களை நீக்க காலக்கெடு குறைப்பு : மத்திய அரசு அதிரடி!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 5:05:16 PM (IST)

கேஸ் சிலிண்டர் விலை ரூ.18 உயர்கிறது? - மத்திய அரசு ஆலோசனை!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 11:44:50 AM (IST)

நீதிபதிகளின் ஓய்வு வயது 60-லிருந்து 62-ஆக உயர்வு? உச்ச நீதிமன்றத்தில் வெளியான முக்கிய உத்தரவு!
வியாழன் 6, ஆகஸ்ட் 2026 4:36:28 PM (IST)

வங்கிகளுக்கான வட்டி விகிதத்தில் மாற்றமில்லை: ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்கோத்ரா அறிவிப்பு!
வியாழன் 6, ஆகஸ்ட் 2026 8:38:12 AM (IST)

எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தால் ஏற்கப்படும்: கா்நாடக முதல்வா் டி.கே. சிவகுமார்
புதன் 5, ஆகஸ்ட் 2026 10:17:16 AM (IST)

ரயில்களில் தரமற்ற உணவு விநியோகம்: உணவு ஒப்பந்த நிறுவனங்களுக்கு ₹5.13 கோடி அபராதம்!
செவ்வாய் 4, ஆகஸ்ட் 2026 5:20:07 PM (IST)








