» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

இமாசலப் பிரதேசத்தில் மலைப்பாதையில் பஸ் கவிழ்ந்து 7 பேர் பலி; 11 பயணிகள் காயம்

ஞாயிறு 9, ஆகஸ்ட் 2026 9:35:28 AM (IST)



இமாசலப் பிரதேசத்தில் மலைப்பாதையில் தனியார் பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 7 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 11 பேர் படுகாயமடைந்தனர்.

இமாசலப் பிரதேசத்தின் சம்பா மாவட்டம், பைராகர் பகுதியில் இருந்து சம்பா நோக்கி தனியார் பஸ் ஒன்று நேற்று காலை 7.15 மணியளவில் சென்று கொண்டிருந்தது.குறுகலான மற்றும் செங்குத்தான சரிவுகளைக் கொண்ட அபாயகரமான மலைப்பாதையான பைராகர் - திஸ்சா சாலையில் உள்ள சுரா பள்ளத்தாக்கு பகுதியில் ‘சலூன்ஜ் மோட்' வளைவில் வந்தபோது, திடீரென அந்த பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது.

இதில் அந்தப் பஸ் தலைக்குப்புற கவிழ்ந்து, கீழே உள்ள மற்றொரு சாலையில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 11 பயணிகள் காயமடைந்தனர். இடிபாடுகளில் சிக்கியிருந்த அவர்கள் உதவிக் கேட்டு அலறினர். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்த பேரிடர் மீட்புக்குழுவினர், தீயணைப்புத்துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர் இணைந்து தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டனர். அவர்கள் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பலியானவர்கள் அனைவரும் சம்பா மாவட்டத்தின் சுரா பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்தது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads









Thoothukudi Business Directory