» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
நீட் விவகார உண்ணாவிரதப் போராட்டம்: சோனம் வாங்சுக் உடல்நிலை 19வது நாளில் கவலைக்கிடம்!
வியாழன் 16, ஜூலை 2026 4:05:48 PM (IST)

நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக டெல்லி ஜந்தர் மந்தரில் 19 நாட்களாகத் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் 9 கிலோவிற்கும் அதிக எடை குறைந்துள்ளதால் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவக் குழு எச்சரித்துள்ளது.
போராட்டம் நீடித்து வரும் நிலையில், சோனம் வாங்சுக்கின் உடல்நிலையைத் தினசரி கண்காணித்துத் தேவையான மருத்துவ உதவிகளை வழங்கத் தில்லி அதிகாரிகளுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குடிமக்களின் உயிர் முக்கியமானது எனக் குறிப்பிட்ட நீதிமன்றத்தின் இந்த கண்காணிப்பு நடவடிக்கைக்கு மத்திய அரசும் ஒப்புதல் அளித்துள்ளது.
அவருக்குப் பரிசோதனை செய்த மருத்துவர் சதீஷ் லம்பா வெளியிட்டுள்ள மருத்துவ அறிக்கையின் விபரம்: சோனம் வாங்சுக்கின் ரத்தச் சர்க்கரை அளவு 80 mg/dL ஆகவும், நாடித் துடிப்பு நிமிடத்திற்கு 72 ஆகவும் உள்ளது. ரத்த அழுத்தம் படுத்த நிலையில் 105/61 mmHg ஆகவும், அமர்ந்த நிலையில் 101/65 mmHg ஆகவும் பதிவாகியுள்ளது. குளுக்கோஸ் இருப்பு தீர்ந்ததால் தசைப் பகுதிகள் கரையத் தொடங்கியுள்ளன. யூரிக் அமில அளவு அதிகரித்துள்ளது உறுப்புகளைப் பாதிக்கும் எச்சரிக்கை கட்டத்தை உணர்த்துவதால், 24 மணி நேரக் கண்காணிப்பு அவசியமாகிறது.
உடல்நலக் குறைபாடுகள் இருப்பினும் போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை என சோனம் வாங்சுக் காணொளி மூலம் தெரிவித்துள்ளார். அரசுத் தரப்பில் இருந்து எவ்வித அதிகாரப்பூர்வப் பேச்சுவார்த்தையும் இல்லாத நிலையில், ஜூலை 20 ஆம் தேதி திட்டமிடப்பட்டுள்ள 'சலோ சன்சாத்' நாடாளுமன்றப் பேரணியில் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பெருமளவில் பங்கேற்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இப்போராட்டத்திற்கு ஆதரவாகப் பாரதிய கிசான் யூனியன் தலைவர் ராகேஷ் திகாயத் மற்றும் டெல்லி முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் ஜந்தர் மந்தர் சென்று சோனம் வாங்சுக்கை நேரில் சந்திக்க உள்ளனர். கலை மற்றும் ஊடகத் துறையினரான விஷால் தத்லானி, சாயாஜி ஷிண்டே, சோபா டே ஆகியோரும் மத்திய அரசு உடனடியாகப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

உத்தரபிரதேசத்தில் போலி சான்றிதழ்கள் மூலம் வக்கீலாக பதிவு: 39 பேர் மீது போலீசார் வழக்கு
புதன் 12, ஆகஸ்ட் 2026 12:50:44 PM (IST)

தமிழகத்திற்குத் தினமும் 1 டிஎம்சி தண்ணீர் திறக்க கர்நாடகாவுக்குக் காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு!
செவ்வாய் 11, ஆகஸ்ட் 2026 5:40:58 PM (IST)

நல்ல நகைச்சுவை: வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம் குறித்துப் பிரகாஷ் ராஜ் விமர்சனம்!
செவ்வாய் 11, ஆகஸ்ட் 2026 4:57:52 PM (IST)

வந்தே மாதரம் பாடலை அவமதித்தால் 3 ஆண்டுகள் சிறை: குடியரசுத் தலைவர் ஒப்புதல்!
செவ்வாய் 11, ஆகஸ்ட் 2026 4:44:13 PM (IST)

டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை முறை தொடர்ந்து இலவசமாகவே இருக்கும்: நிர்மலா சீதாராமன்
செவ்வாய் 11, ஆகஸ்ட் 2026 3:26:12 PM (IST)

செங்கோட்டையில் 80-வது சுதந்திர தின விழா: முதன்முறையாக ஒலிக்கிறது வந்தே மாதரம்!
செவ்வாய் 11, ஆகஸ்ட் 2026 11:53:50 AM (IST)








