» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

தெலுங்கானாவில் சிறுமி உட்பட 6 பேர் கொலை வழக்கு: போக்சோ குற்றவாளி தற்கொலை!

செவ்வாய் 14, ஜூலை 2026 11:32:49 AM (IST)

POcsoAqst.jpg

தெலுங்கானாவில் தனது குடும்பத்தினர் மற்றும் சிறுமி உட்பட 6 பேரைக் கொலை செய்துவிட்டுத் தலைமறைவாக இருந்த போக்சோ குற்றவாளி ராஜ்குமார், காவல்துறையினரால் தேடப்பட்டு வந்த நிலையில் பிணமாக மீட்கப்பட்டுள்ளார்.

தெலுங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டத்தில் உள்ள ஷபாத் பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார். போக்சோ சட்டத்தின் கீழ் கைதாகி சிறையிலிருந்த இவர், அண்மையில் ஜாமீனில் வெளியில் வந்துள்ளார். இதனைத் தொடர்ந்து, ஜூலை 10 அன்று தனது மனைவி, இரு மகன்கள் மற்றும் தான் சிறைக்குச் செல்லக் காரணமாக இருந்த 17 வயதுச் சிறுமி உட்பட மொத்தம் 6 பேரை ராஜ்குமார் படுகொலை செய்துள்ளார். 

இக் கொலைச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், தலைமறைவான ராஜ்குமாரைப் பிடிக்கத் தனிப்படைகள் அமைத்துத் தேடி வந்தனர்.இந்நிலையில், கொத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ராஜ்குமார் உயிரிழந்த நிலையில் கிடப்பதாகக் காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்குச் சென்ற காவல்துறையினர் அவரது உடலைக் கைப்பற்றினர். 

அப்போது அவரது உடலின் அருகே பூச்சிக்கொல்லி மருந்து பாட்டில் ஒன்று கண்டெடுக்கப்பட்டுப் பறிமுதல் செய்யப்பட்டது. 6 பேரைக் கொலை செய்த குற்ற உணர்வு அல்லது காவல்துறையினரிடம் சிக்குவதைத் தவிர்க்கும் நோக்கில் ராஜ்குமார் பூச்சிக்கொல்லி மருந்து அருந்தி தற்கொலை செய்திருக்கலாம் எனக் காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். இச்சம்பவம் குறித்துக் கொத்தூர் காவல்துறையினர் மரண விசாரணை வழக்குப்பதிவு செய்து மேல் விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads






Arputham Hospital



Thoothukudi Business Directory