» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
திருப்பதியில் முதியோருக்கு 30 நிமிடங்களில் இலவச விஐபி தரிசனம்: புதிய திட்டம் தொடக்கம்!
செவ்வாய் 14, ஜூலை 2026 12:38:48 PM (IST)

ஆந்திர மாநிலம் திருப்பதிக்கு வரும் 65 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள், எவ்விதக் கட்டணமும் இன்றி 30 நிமிடங்களில் ஏழுமலையானைத் தரிசனம் செய்யும் புதிய இலவசத் திட்டத்தை முதல்-அமைச்சர் சந்திரபாபு நாயுடு தொடங்கி வைத்துள்ளார்.
திருப்பதிக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை விடுமுறை நாட்களில் அதிகரிப்பதால், பொதுவழியில் தரிசனத்திற்குக் காத்திருக்கும் நேரம் 24 மணி நேரத்தைக் கடக்கிறது. இந்த நெரிசலில் சிக்கி முதியவர்கள் பாதிக்கப்படுவதைத் தவிர்க்கும் வகையில் இப்புதிய விரைவு இலவசத் தரிசனத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இச்சேவைக்காக நாள்தோறும் காலை 10:00 மணி முதல் மாலை 3:00 மணி வரை பிரத்யேக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் மற்றும் தரிசன வழிமுறை:
- 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட முதியவர்கள் தங்களது புகைப்பட அடையாள அட்டை (ஆதார் அட்டை) மற்றும் வயதுச் சான்றைக் கோவிற்பகுதியில் உள்ள 'எஸ்-1' (S-1) கவுண்டரில் காண்பிக்க வேண்டும்.
- வயதுச் சான்று சரிபார்க்கப்பட்ட பின், அவர்கள் ஆலயத்தின் வலதுபுறச் சுவரையொட்டி, பாலத்தின் கீழ் அமைந்துள்ள மண்டபப் பாதை வழியாக அனுமதிக்கப்படுவார்கள்.
- இப்பாதையில் படிக்கட்டுகள் எதுவும் அமைக்கப்படாததால், முதியவர்கள் எவ்வித சிரமமுமின்றி எளிதாக நடந்து சென்று 30 நிமிடங்களில் தரிசனத்தை முடிக்கலாம்.
தரிசனம் முடித்துத் திரும்பும் முதியவர்கள் அனைவருக்கும் தேவஸ்தானம் சார்பில் சூடான சாம்பார் சாதம், தயிர் சாதம் மற்றும் பால் இலவசமாக வழங்கப்படுகிறது. மேலும், அவர்கள் வாகன நிறுத்துமிடத்தில் இருந்து கவுண்டருக்கும், தரிசனம் முடிந்து வெளியேறும் வாயிலில் இருந்து வாகன நிறுத்துமிடத்திற்கும் செல்வதற்குப் பேட்டரி கார் வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

உத்தரபிரதேசத்தில் போலி சான்றிதழ்கள் மூலம் வக்கீலாக பதிவு: 39 பேர் மீது போலீசார் வழக்கு
புதன் 12, ஆகஸ்ட் 2026 12:50:44 PM (IST)

தமிழகத்திற்குத் தினமும் 1 டிஎம்சி தண்ணீர் திறக்க கர்நாடகாவுக்குக் காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு!
செவ்வாய் 11, ஆகஸ்ட் 2026 5:40:58 PM (IST)

நல்ல நகைச்சுவை: வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம் குறித்துப் பிரகாஷ் ராஜ் விமர்சனம்!
செவ்வாய் 11, ஆகஸ்ட் 2026 4:57:52 PM (IST)

வந்தே மாதரம் பாடலை அவமதித்தால் 3 ஆண்டுகள் சிறை: குடியரசுத் தலைவர் ஒப்புதல்!
செவ்வாய் 11, ஆகஸ்ட் 2026 4:44:13 PM (IST)

டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை முறை தொடர்ந்து இலவசமாகவே இருக்கும்: நிர்மலா சீதாராமன்
செவ்வாய் 11, ஆகஸ்ட் 2026 3:26:12 PM (IST)

செங்கோட்டையில் 80-வது சுதந்திர தின விழா: முதன்முறையாக ஒலிக்கிறது வந்தே மாதரம்!
செவ்வாய் 11, ஆகஸ்ட் 2026 11:53:50 AM (IST)








