» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
கரூர் துயர சம்பவம்: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேச்சுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் திமுக மனு!
வெள்ளி 3, ஜூலை 2026 4:26:43 PM (IST)

கரூர் விவகாரத்தில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் பேச்சுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி திமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மூலம் இந்த மனு முறைப்படி தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தாக்கல் செய்யப்பட்டுள்ள அந்த மனுவில், ‘கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக அமைச்சர் அதவ் அர்ஜுனாவின் பொறுப்பற்ற, தவறான, தீய நோக்கம் கொண்ட மற்றும் மரியாதையற்ற பேச்சுக்கு எதிராகச் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எனக் கோரப்பட்டுள்ளது.
மேலும், ‘ஆதவ் அர்ஜுனாவின் பேச்சு, தற்போதைய ஆளுங்கட்சி, அதன் தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் தமிழகக் காவல் துறைக்கு எதிராக ஒரு பொய்யான கதையை உருவாக்குகிறது. அதே நேரத்தில், பொதுமக்களின் கருத்தைத் திசை திருப்பவும், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளின்படி முறைப்படி நடத்தப்பட்டு வரும் ஒரு சட்டப்பூர்வ விசாரணையில் நேரடியாகத் தலையிடவும் இது முயல்கிறது. எனவே, கரூர் விவகாரம் குறித்து ஆதவ் அர்ஜுனா, விஜய் உள்ளிட்டோர் பொதுவெளியில் பேசத் தடை விதிக்க வேண்டும்” என்றும் அந்த மனுவில் விரிவாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்ச்சையைக் கிளப்பிய ஆதவ் அர்ஜுனாவின் பேச்சு:
சென்னை மாமல்லபுரத்தில் நடைபெற்ற ஒரு விழாவில் முக்கியப் பிரமுகர்கள் மாற்று முகாமில் இருந்து வந்து இணைந்தனர். அவ்விழாவில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசியதாவது: "இந்த ஆட்சியைத் தடம் புரளச் செய்யவோ அல்லது கவிழ்க்கவோ முயன்றால் மொத்த தமிழ்நாடும் ஆளுங்கட்சிக்கு எதிராகத் திரும்பும். வரும் தேர்தலில் 234 தொகுதிகளிலும் அவர்கள் டெபாசிட் இழப்பார்கள்.
பிரதான இரு கட்சிகளும் தங்களுக்குள் ரகசியக் கூட்டணியில் இருக்கிறார்கள். வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலிலோ அல்லது விரைவிலோ அவர்கள் தங்களது அதிகாரப்பூர்வ கூட்டணியை அறிவிப்பார்கள். அதற்குப் பாஜக-வும் அவர்களுக்குத் துணையாக நிற்கும். கரூரில் நடந்த சம்பவத்திற்கு அவர்கள் பதில் சொல்லியே ஆக வேண்டும்.
இதனைச் சட்டப்படி நாங்கள் எதிர்கொண்டு நடவடிக்கை எடுப்போம். கொளத்தூரில் மு.க.ஸ்டாலின் தோற்று, அப்போது கண்ணீர் வடித்தார். அந்த கண்ணீர் தற்போது கரூர் மக்களின் கண்ணீராக மாறியுள்ளது. அந்த பாவம் உங்களைச் சும்மா விடாது. இப்போதைய ஆளுங்கட்சிக்குக் கடைசி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மட்டும்தான்.
இனி உங்கள் குடும்பம் லண்டனில் போய் செட்டில் ஆக வேண்டியதுதான். கரூரில் எங்களுக்கு ஒரு கணக்கு வழக்கு உள்ளது; அதை முடிக்காமல் விடமாட்டோம்" என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசியிருந்தார். இப் பேச்சுக்கு எதிராகவே தற்போது உச்ச நீதிமன்றத்தில் அவசர மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இமாசலப் பிரதேசத்தில் மலைப்பாதையில் பஸ் கவிழ்ந்து 7 பேர் பலி; 11 பயணிகள் காயம்
ஞாயிறு 9, ஆகஸ்ட் 2026 9:35:28 AM (IST)

யூபிஐ, ரூபே கார்டு பரிவர்த்தனைக் கட்டணம்: : மக்களவையில் மசோதா நிறைவேற்றம்!
சனி 8, ஆகஸ்ட் 2026 5:36:51 PM (IST)

நீட் வினாத்தாளை பேராசிரியர்களே விற்றனர்: சிபிஐ குற்றப்பத்திரிகையில் அதிர்ச்சித் தகவல்!
சனி 8, ஆகஸ்ட் 2026 12:10:37 PM (IST)

டீப்ஃபேக் மற்றும் போலி தகவல்களை நீக்க காலக்கெடு குறைப்பு : மத்திய அரசு அதிரடி!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 5:05:16 PM (IST)

நெசவாளர்களை ஆதரிக்கக் கைத்தறிப் பொருட்களை வாங்குங்கள்: பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள்!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 4:44:44 PM (IST)

கேஸ் சிலிண்டர் விலை ரூ.18 உயர்கிறது? - மத்திய அரசு ஆலோசனை!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 11:44:50 AM (IST)








