» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
ராமர் கோவில் காணிக்கை மோசடி குற்றவாளிகள் தப்ப முடியாது: யோகி ஆதித்யநாத் எச்சரிக்கை!
வெள்ளி 26, ஜூன் 2026 4:45:23 PM (IST)
அயோத்தி ராமர் கோவிலில் காணிக்கை மற்றும் நன்கொடை மோசடி புகாரில் தொடர்புடைய குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்கள் தப்ப முடியாது என்றும், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் எச்சரித்துள்ளார்.
அயோத்தி ராமர் கோவிலில் சுவாமிக்கு அளிக்கப்பட்ட காணிக்கை பணம் மற்றும் நகைகள் காணாமல் போனதாக எழுந்த புகாரை அடுத்து, அதுகுறித்து விசாரிக்கச் சிறப்பு விசாரணைக்குழுவை (SIT) உ.பி. அரசு அமைத்தது. இந்தச் சிறப்பு விசாரணைக்குழு தனது 20 பக்க இடைக்கால அறிக்கையை தற்போது அரசிடம் சமர்ப்பித்துள்ளது.வங்கி மற்றும் அறக்கட்டளையுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் உட்பட சுமார் 150 பேரிடம் விசாரணை நடத்தியுள்ள இக்குழு, ஸ்ரீ ராம ஜென்ம பூமி அறக்கட்டளையை மறுசீரமைக்க வேண்டும் உள்ளிட்ட பரிந்துரைகளை வழங்கியுள்ளது. இந்த அறிக்கையின் அடிப்படையில் முதற்கட்டமாக 8 பேர் மீது உத்தரப் பிரதேச காவல் துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
இந்த விவகாரம் குறித்துப் பேசிய முதல்வர் யோகி ஆதித்யநாத், "அயோத்தி என்பது மக்களின் நம்பிக்கை மற்றும் சனாதன தர்மத்தின் அடையாளமாகும். அதன் மீது தவறான பாதையைச் செலுத்த வேண்டாம். சிறப்பு விசாரணைக் குழுவின் அறிக்கை கிடைத்தவுடன் உடனடியாக நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன.
உண்மைக்கும் பொய்க்கும் இடையிலான வேறுபாட்டை அரசு வெளிக்கொண்டு வரும். பொதுமக்களின் நம்பிக்கையுடன் விளையாடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. சனாதன தர்மத்தின் நம்பிக்கையில் தலையிடுபவர்கள் அதற்கான விளைவுகளைச் சந்திக்க நேரிடும், இதில் யாருக்கும் எந்த விலக்கும் அளிக்கப்படாது" என்று தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இமாசலப் பிரதேசத்தில் மலைப்பாதையில் பஸ் கவிழ்ந்து 7 பேர் பலி; 11 பயணிகள் காயம்
ஞாயிறு 9, ஆகஸ்ட் 2026 9:35:28 AM (IST)

யூபிஐ, ரூபே கார்டு பரிவர்த்தனைக் கட்டணம்: : மக்களவையில் மசோதா நிறைவேற்றம்!
சனி 8, ஆகஸ்ட் 2026 5:36:51 PM (IST)

நீட் வினாத்தாளை பேராசிரியர்களே விற்றனர்: சிபிஐ குற்றப்பத்திரிகையில் அதிர்ச்சித் தகவல்!
சனி 8, ஆகஸ்ட் 2026 12:10:37 PM (IST)

டீப்ஃபேக் மற்றும் போலி தகவல்களை நீக்க காலக்கெடு குறைப்பு : மத்திய அரசு அதிரடி!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 5:05:16 PM (IST)

நெசவாளர்களை ஆதரிக்கக் கைத்தறிப் பொருட்களை வாங்குங்கள்: பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள்!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 4:44:44 PM (IST)

கேஸ் சிலிண்டர் விலை ரூ.18 உயர்கிறது? - மத்திய அரசு ஆலோசனை!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 11:44:50 AM (IST)








