» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
மம்முட்டி, மாதவன் உள்ளிட்ட 65 பேருக்கு பத்ம விருதுகள் குடியரசுத் தலைவர் விருது வழங்கினார்!
புதன் 24, ஜூன் 2026 11:14:06 AM (IST)

டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் இரண்டாம் கட்டமாக, கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா, நடிகர் மாதவன் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த மிருதங்க வித்வான் திருவாரூர் பக்தவத்சலம் உள்ளிட்ட 65 பேருக்குக் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பத்ம விருதுகளை வழங்கியுள்ளார்.
கலை, இலக்கியம், சமூக சேவை, மருத்துவம், அறிவியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் சாதனையாளர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் பத்ம விபூஷண், பத்ம பூஷண் மற்றும் பத்மஸ்ரீ ஆகிய உயரிய பத்ம விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த ஆண்டிற்கான பத்ம விருதுகள் பட்டியலை (5 பத்ம விபூஷண், 13 பத்மபூஷண், 113 பத்மஸ்ரீ என மொத்தம் 131 விருதுகள்) மத்திய உள்துறை அமைச்சகம் ஏற்கனவே வெளியிட்டிருந்தது. இதில் முதற்கட்டமாகச் கடந்த மாதம் 25-ஆம் தேதி 66 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்ட நிலையில், அதன் தொடர்ச்சியாக இரண்டாம் கட்ட விருது வழங்கும் விழா இன்று ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்றது.
இவ்விழாவில் பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் பலர் நேரில் பங்கேற்றனர். விழாவில், இந்தியக் கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா, நடிகர்கள் மம்முட்டி, மாதவன், டென்னிஸ் வீரர் விஜய் அமிர்தராஜ், தமிழகத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற மிருதங்க வித்வான் திருவாரூர் பக்தவத்சலம் மற்றும் சிற்பக் கலைஞர் ராஜஸ்தபதி கலியப்ப கவுண்டர் உள்ளிட்ட 65 பேருக்குக் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு விருதுகளை வழங்கித் தேசத்தின் சார்பில் கவுரவித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இமாசலப் பிரதேசத்தில் மலைப்பாதையில் பஸ் கவிழ்ந்து 7 பேர் பலி; 11 பயணிகள் காயம்
ஞாயிறு 9, ஆகஸ்ட் 2026 9:35:28 AM (IST)

யூபிஐ, ரூபே கார்டு பரிவர்த்தனைக் கட்டணம்: : மக்களவையில் மசோதா நிறைவேற்றம்!
சனி 8, ஆகஸ்ட் 2026 5:36:51 PM (IST)

நீட் வினாத்தாளை பேராசிரியர்களே விற்றனர்: சிபிஐ குற்றப்பத்திரிகையில் அதிர்ச்சித் தகவல்!
சனி 8, ஆகஸ்ட் 2026 12:10:37 PM (IST)

டீப்ஃபேக் மற்றும் போலி தகவல்களை நீக்க காலக்கெடு குறைப்பு : மத்திய அரசு அதிரடி!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 5:05:16 PM (IST)

நெசவாளர்களை ஆதரிக்கக் கைத்தறிப் பொருட்களை வாங்குங்கள்: பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள்!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 4:44:44 PM (IST)

கேஸ் சிலிண்டர் விலை ரூ.18 உயர்கிறது? - மத்திய அரசு ஆலோசனை!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 11:44:50 AM (IST)








