» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

வீடுகளில் திருடி சொகுசு வாழ்க்கை வாழ்ந்த ஐடி ஊழியர் கைது: தங்க நகைகள், கார் பறி​முதல்!!

செவ்வாய் 10, பிப்ரவரி 2026 4:43:30 PM (IST)



ஆந்​திராவில் சொகுசு ​வாழ்க்கை வாழ பூட்​டிய வீடு​களில் திருடிய ஐடி ஊழியரை போலீசார் கைது செய்​துள்​ளனர். அவரிட​மிருந்த 699 கிராம் தங்க நகைகள், 3.8 கிலோ வெள்ளி பொருட்​கள் மற்​றும் பிஎம்​டபிள்யூ சொகுசு கார் போன்​றவற்றை பறி​முதல் செய்​தனர்.

ஆந்​திர மாநிலம், காக்​கி​நாடா பகு​தியை சேர்ந்​தவர் மகேஷ் ரெட்டி என்​கிற சன்னி (27). விசாகப்​பட்​டினத்​தில் ஐ.டி மேற்​படிப்பை முடித்த மகேஷ் ரெட்​டிக்கு ஹைத​ரா​பாத்​தில் ஒரு பிரபல ஐடி நிறு​வனத்​தில் வேலை கிடைத்​தது. கை நிறைய சம்​பளம். ஆனாலும் அது அவரின் ஆசைகளை நிறைவேற்ற உதவ​வில்​லை. மகேஷ் ரெட்​டிக்கு சிறு வயதிலிருந்தே திருடும் பழக்​கம் இருந்துள்ளது.

இதனால் அவர் தனது 15 வயதில் திருடி மாட்​டிக்​கொண்​டார். அதன் பிறகு, அவர் சிறு​வர் சீர்​திருத்த பள்​ளி​யில் படித்​தார். தற்போது ஐடி துறை​யில் பட்ட மேற்​படிப்பு படித்த பிறகு, தனது ‘கை’த்​தொழிலில் மீண்​டும் கவனம் செலுத்த ஆரம்​பித்​தார். இதற்காக ஒரு பைக் வாங்​கி​னார்.

அதில் நம்​பர் பிளேட் போடா​மல், முகக்​கவசம், கையுறை அணிந்து இரவு நேரங்​களில் பூட்​டிய வீடு​களில் பூட்டை உடைத்​து, பீரோ​வில் உள்​ளதை அள்​ளிச் செல்​வதை வழக்​க​மாக்கி கொண்டார். இதற்​காக கட்​டிங் பிளேயர், ஸ்க்ரூ டிரைவர், ட்ரில்​லிங் இயந்​திரம் போன்​றவற்​றை​யும் வாங்கி வைத்து உள்​ளார்.

பல முறை ராமசந்​தி​ராபுரம், இந்​திர பாளை​யம், ராஜ​முந்​திரி சிறை​களுக்கு சென்​றுள்​ளார். இது வரை அவர் 60 வீடு​களில் திருடி உள்​ளார். 26 வழக்​கு​கள் இவர் மீது நிலு​வை​யில் உள்​ளன. சமீபத்தில் 14 மாதங்​கள் வரை இவர் சிறை தண்​டனை அனுபவித்து உள்​ளார். ஆயினும் இவர் திருடு​வதை கைவிடவில்லை. ஏனெனில், இவருக்கு ஆடம்​பர​மாக வாழ்​வது மிகவும் பிடிக்​கு​மாம்.

அதாவது, பிஎம்​டபிள்யூ சொகுசு கார், அடிக்​கடி வெளி​நாட்டு சுற்றுலா, கழுத்​தி​லும், கையிலும் தங்க செயின்​கள், பிரேஸ்​லெட். 4 விரல்​களில் தங்க மோதிரம் அணிந்​திருப்​பார். இந்த வாழ்க்கை மிக​வும் பிடித்து போன​தால், போலீசார் கைது செய்​தா​லும், மீண்டும் திருட்டு தொழிலையே செய்​து, சொகுசு வாழ்க்​கையை வாழ்ந்து வரு​கிறார் மகேஷ் ரெட்​டி.

இந்​நிலை​யில் கடந்த 8-ம் தேதி விசாகப்​பட்​டினத்​தில் மகேஷ் ரெட்டியை போலீசார் கைது செய்​தனர். அப்​போது அவரிட​மிருந்த 699 கிராம் தங்க நகைகள், 3.8 கிலோ வெள்ளி பொருட்​கள் மற்​றும் பிஎம்​டபிள்யூ சொகுசு கார் போன்​றவற்றை போலீசார் பறி​முதல் செய்​தனர்.

இது த​விர ரூ.15.63 லட்​சம் மதிப்​புள்ள பொருட்​களும் பறி​முதல் செய்​யப்​பட்​டன. மகேஷ் ரெட்டி விசாகப்பட்​டினம் மட்​டுமின்​றி, ஹைத​ரா​பாத், காக்​கி​ நாடா ஆகிய பகு​தி​களி​லும் தனது கை வரிசையை காட்​டி உள்​ளார்​ என்பது குறிப்​பிடத்​தக்​கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital






CSC Computer Education



Thoothukudi Business Directory