» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
தேர்தல் ஆணையம் பாஜகவுடன் இணைந்து மோசடி : ராகுல் குற்றச்சாட்டு!
வியாழன் 7, ஆகஸ்ட் 2025 5:42:05 PM (IST)

தேர்தல் ஆணையம் பாஜகவுடன் இணைந்து சட்டமன்ற மற்றும் மக்களவை தேர்தல்களில் வாக்கு திருட்டில் ஈடுபட்டு வருவதாக மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மீண்டும் குற்றம்சாட்டியுள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட அவர், மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், கர்நாடகா, அரியானா சட்டமன்றத் தேர்தல், மக்களவை தேர்தல்களில் நடந்த முறைகேடுகள் குறித்த தரவுகள் மற்றும் புள்ளிவிவரங்களை மேற்கோள் காட்டி ராகுல் விளக்கம் அளித்தார்.
அப்போது பேசிய அவர் "கர்நாடகாவில் 16 இடங்களை வெல்வோம் என்று எங்கள் உள் கருத்துக்கணிப்பு தெரிவித்தது. ஆனால் நாங்கள் ஒன்பது இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றோம். எதிர்பாராத விதமான நாங்கள் தோற்ற 7 தொகுதிகளில் கவனம் செலுத்தினோம். அதில் நாங்கள் மகாதேவபுரா என்ற ஒரு தொகுதியை தேர்ந்தெடுத்து ஆய்வு செய்தோம்.
இந்த மகாதேவபுரா சட்டமன்றத் தொகுதியில் மட்டுமே 1,00,250 வாக்குகள் திருடப்பட்டதைக் கண்டறிந்தோம். ஐந்து வெவ்வேறு வழிகளில் வாக்குகள் திருடப்பட்டது. போலி வாக்காளர்கள், போலி மற்றும் செல்லாத முகவரிகள் மற்றும் ஒரே முகவரியில் பல வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். ஒரு கட்டிடத்தில் 50-60 பேர் வசிப்பதாக பதிவாகி இருந்தது.
ஆனால் நாங்கள் அங்கு சென்றபோது, அந்த வீட்டில் ஒரு குடும்பம் மட்டுமே வசித்தது. அரியானா, மத்தியப் பிரதேசத் தேர்தலில் தேர்தலுக்கு முந்தைய, பிந்தைய கருத்துக் கணிப்புகள் ஒன்றைச் சொல்கின்றன. பின்னர் திடீரென்று முடிவு முற்றிலும் மாறுபட்ட திசையில் பெரிய அளவில் ஏற்ற இறக்கங்களுடன் செல்கிறது. எனவே, கருத்துக் கணிப்புகள் நமக்கு ஏதோ ஒன்றைக் காட்டுகின்றன. திடீரென்று முடிவு எதிர் திசையில் செல்வதை காண்கிறோம்" என்று தெரிவித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மெஸ்ஸிக்கு ரூ.10 கோடி மதிப்புள்ள கைக்கடிகாரம் பரிசளித்த ஆனந்த் அம்பானி!
புதன் 17, டிசம்பர் 2025 4:39:23 PM (IST)

மெஸ்ஸி பங்கேற்ற நிகழ்ச்சியில் குளறுபடி: மேற்கு வங்க விளையாட்டுத்துறை அமைச்சர் ராஜினாமா
செவ்வாய் 16, டிசம்பர் 2025 4:28:50 PM (IST)

100 நாள் வேலைத் திட்டம் மாற்றம்: நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டம்!
செவ்வாய் 16, டிசம்பர் 2025 3:46:07 PM (IST)

தமிழக தேர்தல் பொறுப்பாளர்களாக நியமனம்: 3 மத்திய அமைச்சர்களை களமிறக்கிய பாஜக!
செவ்வாய் 16, டிசம்பர் 2025 11:51:50 AM (IST)

கடும் பனி மூட்டத்தால் அடுத்தடுத்து வாகனங்கள் மோதி விபத்து : 4 பேர் பலி
செவ்வாய் 16, டிசம்பர் 2025 11:14:45 AM (IST)

நூறுநாள் வேலை திட்டத்தின் பெயரை மாற்ற எதிர்ப்பு: மக்களவையில் திமுக நோட்டீஸ்
செவ்வாய் 16, டிசம்பர் 2025 11:11:15 AM (IST)











srinivasanAug 8, 2025 - 04:31:08 PM | Posted IP 162.1*****