» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
மெஸ்ஸி பங்கேற்ற நிகழ்ச்சியில் குளறுபடி: மேற்கு வங்க விளையாட்டுத்துறை அமைச்சர் ராஜினாமா
செவ்வாய் 16, டிசம்பர் 2025 4:28:50 PM (IST)

கொல்கத்தாவில் மெஸ்ஸி பங்கேற்ற நிகழ்ச்சியில் குளறுபடி எதிரொலியாக மேற்கு வங்காள விளையாட்டுத்துறை அமைச்சர் அரூப் பிஸ்வா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
அர்ஜென்டினா கால்பந்து அணியின் கேப்டன் லயோனல் மெஸ்சி, 3 நாள் சுற்றுப்பயணமாக 13-ஆம் தேதி இந்தியா வந்தார். கொல்கத்தா சென்ற அவர், தனது 70 அடி உயர சிலையைத் திறந்து வைத்தார். பின்னர், அங்குள்ள சால்ட் லேக் மைதானத்தில் ரசிகர்களைக் காண்பதற்கான பிரமாண்ட நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
ஆனால் ரசிகர்கள் முண்டியடித்ததால், 22 நிமிடங்களிலேயே அங்கிருந்து மெஸ்சி புறப்பட்டார். இதனால் நீண்ட தூரத்திலிருந்து வந்ததாலும், ஆயிரக்கணக்கான ரூபாய் செலவில் டிக்கெட்டுகள் வாங்கியிருந்ததாலும் ஏற்பட்ட ஆத்திரத்தில் ரசிகர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். இருக்கைகளை உடைத்தனர்; தடுப்பு வேலிகளைத் தூக்கி எறிந்தனர். இந்த அசம்பாவிதம் தொடர்பாக விசாரணை நடத்த, கொல்கத்தா ஐகோர்ட்டு ஓய்வு பெற்ற நீதிபதி ஆஷிம் குமார் ரே தலைமையிலான விசாரணைக் குழுவை அமைத்தது. இதனிடையே, முதன்மை நிகழ்ச்சி அமைப்பாளர் சதத்ரு தத்தாவை போலீசார் கைது செய்தனர்.
இதற்கிடையே, மேற்கு வங்காள விளையாட்டுத்துறை அமைச்சர் அரூப் பிஸ்வா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். முதல் அமைச்சர் மம்தா பானர்ஜிக்கு தனது கைப்பட ராஜினாமா கடிதத்தை எழுதி அனுப்பினார். இந்த ராஜினாமாவை மம்தா பானர்ஜியும் ஏற்றுக்கொண்டார். மெஸ்சி நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடிக்கு அரூப் பிஸ்வாவே பொறுப்பெனவும், முறையான ஏற்பாடுகளை செய்யவில்லை என்றும் பலரும் குற்றம் சாட்டிய நிலையில், நியாயமான விசாரணை நடைபெற வேண்டும் என்பதற்காகவே பதவியில் இருந்து விலகியதாக அவர் கூறியுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இம்ரான் கானை பாதுகாப்பது பாகிஸ்தான் அரசின் கடமை : கங்குலி ஆதரவு
புதன் 18, பிப்ரவரி 2026 5:36:45 PM (IST)

டெல்லி ஏஐ உச்சி மாநாட்டில் குளறுபடி: மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பகிரங்க மன்னிப்பு!
புதன் 18, பிப்ரவரி 2026 11:39:15 AM (IST)

ஆபத்தான முறையில் 'ரீல்ஸ்' வீடியோ: ஓடும் வாகனங்களின் கதவுகளைத் திறந்த வாலிபர் கைது!
புதன் 18, பிப்ரவரி 2026 10:51:08 AM (IST)

டெல்லியில் ஏஐ உச்சி மாநாடு: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!
செவ்வாய் 17, பிப்ரவரி 2026 12:18:58 PM (IST)

ராஜஸ்தான் ரசாயன தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து: 7 தொழிலாளர்கள் உயிரிழப்பு
திங்கள் 16, பிப்ரவரி 2026 12:14:44 PM (IST)

தமிழில் முருகன் பாடலை பாடி அசத்திய பீகார் இளம் எம்.எல்.ஏ மைதிலி தாகூர்!
திங்கள் 16, பிப்ரவரி 2026 11:13:01 AM (IST)










