» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

பிரதமர் மோடியால் பிரச்சினைகளை புரிந்து கொள்ள முடியவில்லை : பிரியங்கா தாக்கு

திங்கள் 15, ஏப்ரல் 2024 8:36:33 AM (IST)

பிரதமர் மோடியால் மக்களின் பிரச்சினைகளை புரிந்து கொள்ள முடியவில்லை எனவும், அவர் மக்களிடம் இருந்து முற்றிலும் துண்டிக்கப்பட்டு இருப்பதாகவும் பிரியங்கா குற்றம் சாட்டியுள்ளார்.

காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா ராஜஸ்தானில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். அங்குள்ள ஜலோரில் முதல்-மந்திரி அசோக் கெலாட் மகன் வைபவ் கெலாட்டை ஆதரித்து ேநற்று நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார் இதில் உரையாற்றிய அவர், பிரதமர் மோடியை கடுமையாக சாடினார். அப்போது அவர் கூறியதாவது: உங்களின் மிகப்பெரிய பிரச்சினையே விலைவாசி உயர்வுதான். ஆனால் உங்களின் பிரச்சினைகளை பிரதமர் மோடியால் புரிந்து கொள்ள முடியவில்லை என நினைக்கிறேன்.

ஒருவர் அளவுக்கு அதிகமான அதிகாரங்களை வைத்திருக்கும் போது, அவரிடம் மக்கள் உண்மையை சொல்லமாட்டார்கள். அதைப்போலத்தான் பிரதமரை சுற்றியிருக்கும் அதிகாரிகளும், அவரது சகாக்களும் கள நிலவரத்தை அவரிடம் கூறுவதற்கு அஞ்சுகின்றனர். இதனால் மக்களிடம் இருந்தும் அவர்களின் பிரச்சினைகளில் இருந்தும் பிரதமர் மோடி முழுமையாக துண்டிக்கப்பட்டு விட்டார்.

விலைவாசி உயர்வும், வேலையில்லா திண்டாட்டமும்தான் நாடு தற்போது எதிர்கொள்ளும் மிகப்பெரிய 2 பிரச்சினைகள். ஆனால் யாரும் அவற்றுக்கு செவிமடுக்கவில்லை. ஜி20 போன்ற நிகழ்வுகள் இந்தியாவில் நடக்கும்போது நாம் பெருமை அடைகிறோம். ஆனால் மற்றொரு உண்மை என்னவென்றால், நாட்டின் ஏழை மக்கள் விலைவாசி உயர்வால் பாதிக்கப்படுகிறார்கள், வேலையின்மை காரணமாக இளைஞர்கள் திண்டாடுகிறார்கள்.

மத்தியில் ஆளும் பா.ஜனதா ஊழலுக்கு எதிராக போராடவில்லை. அதன் வாக்குறுதிகள் அனைத்தும் போலியானவை. அது எதிர்க்கட்சிகளின் குரலை ஒடுக்குவதற்கு மட்டுமே விரும்புகிறது. இவ்வாறு பிரியங்கா கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital











Thoothukudi Business Directory