» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ராகுல் யாத்திரை நிறைவு விழா: இண்டியா கூட்டணி பலத்தை காட்டிய தலைவர்கள்!!

திங்கள் 18, மார்ச் 2024 10:26:46 AM (IST)



மும்பையில் நடைபெற்ற பாரத் ஒற்றுமை யாத்திரை நிறைவு கழ்ச்சியில் இண்டியா கூட்டணி தலைவர்கள் பங்கேற்று தங்கள் பலத்தை காட்டினர்.

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தனது 2-ம் கட்ட பாரத் ஒற்றுமை யாத்திரையை மணிப்பூரில் தொடங்கி மும்பையில் நேற்று முன்தினம் நிறைவு செய்தார். இதன் நிறைவுவிழா நிகழ்ச்சியில் பங்கேற்க இண்டியா கூட்டணி தலைவர்களுக்கு ராகுல் காந்தி அழைப்பு விடுத்திருந்தார்.

மும்பை சிவாஜி பூங்காவில் நேற்று மாலை நடைபெற்ற நிகழ்ச்சியில் சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பிரியங்கா, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், சிவசேனா (உத்தவ்) தலைவர் உத்தவ் தாக்கரே, தேசியவாத காங்கிரஸ் தலைவர் (சரத்) சரத் பவார், பிஹார் முன்னாள் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெஹபூபா முப்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.

அப்போது தேஜஸ்வி யாதவ் கூறுகையில், ‘‘தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. ராகுல் அழைப்பின் பேரில் நாங்கள் மும்பை வந்துள்ளோம்’’ என்றார். மெகபூபா முப்தி கூறுகையில், ‘‘அரசியல் சாசனத்தை மாற்றுவதற்காக 400 இடங்களுக்கு மேல் வெற்றிபெறுவோம் என பாஜக கூறுகிறது. ராகுல் காந்தியின் பெயரில் உள்ள காந்தியை கண்டு பாஜகவினர் பயப்படுகின்றனர்’’ என்றார்.

சரத்பவார் கூறுகையில், ‘வெள்ளையனே வெளியேறு என்ற அழைப்பை மகாத்மா காந்தி மும்பையில் இருந்து விடுத்தார். அதுபோல் ஆட்சியிலிருந்து பாஜக வெளியேற வேண்டும் என்ற அழைப்பை இண்டியா கூட்டணி தலைவர்கள் விடுக்க வேண்டும்’’ என்றார். உத்தவ் தாக்கரே கூறுகையில், ‘‘மக்கள் ஒன்றிணையும்போது, சர்வாதிகாரம் முடிவடைகிறது’’ என்றார். இந்நிகழ்ச்சியில் தேர்தலில் வெற்றி பெறும் வியூகம் குறித்து இண்டியா கூட்டணி தலைவர்கள் ஆலோசித்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Arputham Hospital







Thoothukudi Business Directory