» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

வாடிக்கையாளர்கள் கணக்கில் இருந்து ரூ.1¼ கோடி மோசடி: வங்கி அதிகாரி கைது

ஞாயிறு 17, மார்ச் 2024 9:24:54 AM (IST)

வாடிக்கையாளர்கள் கணக்கில் இருந்து ரூ.1¼ கோடிபணத்தை  திருடிய  வங்கி அதிகாரியை போலீசார் கைது செய்தனர். 

காஷ்மீரை சேர்ந்த தேசிய மயமாக்கப்பட்ட தனியார் வங்கியாக ஜம்மு-காஷ்மீர் வங்கி உள்ளது. இந்தநிலையில் காஷ்மீரின் பவுனியில் உள்ள இந்த வங்கி கிளையின் வாடிக்கையாளர்களின் கணங்குகளில் இருந்து பணம் திருடு போவது குறித்து போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். 

அப்போது நீண்ட நாட்களாக பண பரிமாற்றம் நடைபெறாத வாடிக்கையாளர்களின் வங்கி கணக்குகளில் டெபாசிட் செய்யப்பட்டிருந்த பணம் மாயமாகி இருப்பது தெரிந்தது.  இவ்வாறு கடந்த 3 ஆண்டுகளாக செயலில் இல்லாத வாடிக்கையாளர்களின் கணக்கில் இருந்து சுமார் ரூ.1.26 கோடி மோசடி செய்யப்பட்டுள்ளது வெளிச்சத்திற்கு வந்தது. மோசடி செய்யப்பட்ட பணம் வங்கியின் உதவி மேலாளராக பணியாற்றி வந்த இஷ்விந்தர் சிங் ரன்யாலின் கணக்குக்கு வரவு செய்யப்பட்டுள்ளதை போலீசார் கண்டறித்தனர். இந்தநிலையில் வாடிக்கையாளர்களின் பணத்தை திருடிய  வங்கி அதிகாரியை போலீசார் கைது செய்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Arputham Hospital






Thoothukudi Business Directory