» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

மருந்து சீட்டில் கேபிட்டல் லெட்டரில்தான் எழுத வேண்டும் : அரசு அதிரடி உத்தரவு!

வெள்ளி 23, பிப்ரவரி 2024 10:34:32 AM (IST)

மருத்துவர்கள், நோயாளிகளுக்கு மருந்து சீட்டுகளை (prescriptions) எழுதித் தரும் போது மருந்துகளின் பெயரை "கேப்பிட்டல் எழுத்துகள்" (CAPITAL LETTERS) எனும் "பெரிய" ஆங்கில எழுத்துகளில்தான் இனி எழுதித் தர வேண்டும் என தமிழக சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

நீண்ட காலமாகவே டாக்டர்கள் எழுதி தரும் மருந்துகளின் பெயர்கள் புரிவதில்லை எனும் கருத்தை பொதுமக்களும், மருந்தாளுனர்களும் (pharmacists) கூறி வந்தனர். எடுத்துக் காட்டாக, செலின் (வைட்டமின் சி) மற்றும் செலிப் (மூட்டு அழற்சிக்கான மருந்து), மாலாக்வின் (மலேரியாவிற்கான மருந்து) மற்றும் மாஹாக்வின் (ஆன்டிபயாடிக்), அசூ (ஆன்டிபயாடிக்) மற்றும் அசாக்ஸ் (மனநலம்) போன்ற பல மருந்துகளின் பெயர்கள் ஒன்றுக்கொன்று ஒத்து போவதால், மருத்துவர்கள் அவற்றை அவசரமாக எழுதி தரும் போது மருந்தாளுனர்களால் அவற்றை புரிந்து கொள்ள முடியாமல் இருந்தது.

இதனால் பல்வேறு குழப்பங்கள் ஏற்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. ஒரு சில நோயாளிகள் தவறான மருந்தை உட்கொண்டதால் ஆபத்தான சிக்கல்களை சந்திக்க நேர்ந்த சம்பவங்கள் நடைபெற்றது. கடந்த சில வருடங்களாக இந்த புகார் தீவிரமடைந்து வந்த நிலையில், இது குறித்து தொடரப்பட்ட ஒரு வழக்கில் ஒடிசா உயர் நீதிமன்றம், மருத்துவர்கள் எழுதித் தரும் மருந்துகள் மற்றும் பரிந்துரைகள் உள்ளிட்டவை புரியும் வகையில் இருக்க வேண்டும் என்றும் அதற்கான நடவடிக்கைகளை எடுக்க தேசிய மருத்துவ கவுன்சிலுக்கு உத்தரவு பிறப்பித்து தீர்ப்பளித்தது.

இதன் அடிப்படையில் தேசிய மருத்துவ கவுன்சில் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டது. நோயாளிகளுக்கு புரியும் வகையில் மருந்துகளின் பெயர்களை எழுதித் தர வேண்டும் என்று மத்திய அரசும் ஏற்கனவே அறிவுறுத்தி வந்தது. இந்நிலையில், தமிழ்நாட்டில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்கள், தாங்கள் எழுதித்தரும் மருந்துச்சீட்டில் இடம்பெறும் மருந்துகளின் பெயர்களை, நோயாளிகளுக்கு புரியும் வகையில், தெளிவாக, "கேப்பிட்டல்" எழுத்தில்தான் இனி எழுத வேண்டும் என தமிழக சுகாதாரத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த செயல் சில நிமிடங்கள் மட்டுமே அதிகம் எடுக்கும் என்றும் இதன் மூலம் சரியான மருந்தை நோயாளிகள் எடுத்து கொள்வது உறுதி செய்யப்படும் என்பதால் மருத்துவர்கள் இதனை வரவேற்றுள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Arputham Hospital






Thoothukudi Business Directory