» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

பெரும் முதலாளிகளிட் பாஜக பெற்ற நன்கொடைகள் அம்பலமாகும் : ப. சிதம்பரம்

வெள்ளி 16, பிப்ரவரி 2024 10:43:30 AM (IST)

கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் பெரும் முதலாளிகள் மூலம் பா.ஜனதா பெற்ற 90 சதவீத நன்கொடைகள் அம்பலமாகப் போகிறது என்று முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் கூறியுள்ளார்.

அரசியல் கட்சிகள் நன்கொடை பெறும் தேர்தல் பத்திரம் திட்டம் செல்லாது என உச்சநீதிமன்றம் நேற்று அதிரடி தீர்ப்பு வழங்கியது. மேலும், நன்கொடை பெற்ற விவரங்களை பாரத ஸ்டேட் வங்கி தேர்தல் ஆணையத்திடம் வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது.

இதனால் ஒவ்வொரு கட்சிகளும் கார்ப்பரேட் நிறுவனங்கள், பெரும் முதலாளிகளிடம் இருந்து எவ்வளவு பணம் நன்கொடையாக பெற்றது என்ற விவரம் மார்ச் 31-ந்தேதிக்குள் இந்திய தேர்தல் ஆணைய இணைய தளத்தில் வெளியிடப்பட இருக்கிறது.

இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை ப. சிதம்பரம் வரவேற்றுள்ளார். தீர்ப்பு குறித்து அவர் கூறியதாவது: சமத்துவம், நியாயம் மற்றும் ஜனநாயகம் ஆகிய கொள்கைகளை தேர்தல் பத்திரம் திட்டம் மீறியது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வெளிப்படைத்தன்மை, தகவல் அறியும் உரிமை, தேர்தலில் சமநிலை ஆகியவற்றிற்கு கிடைத்த வெற்றி.

தற்போது பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் பெரும் முதலாளிகள் மூலம் பா.ஜனதா பெற்ற 90 சதவீத நன்கொடைகள் அம்பலமாகப் போகிறது.யார் பணம் கொடுத்தார்கள். அவர்கள் பணம் கொடுத்தபோது, அதற்கு பிரதிபலமான கட்சி கொடுத்தது என்ன? என்பதை உலகம் தெரிந்து கொள்ள போகிறது. அரசியல் கட்சிக்கு ஏன் பணம் கொடுக்கப்பட்டது என மக்கள் கேள்வி கேட்பார்கள். அதன்பின் மக்கள் தனது சொந்த முடிவை எழுதுவார்கள். இவ்வாறு ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital











Thoothukudi Business Directory