» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

300 யூனிட் இலவச மின்சாரம் அளிக்கும் திட்டம் தொடக்கம்: பிரதமர் மோடி அறிவிப்பு

புதன் 14, பிப்ரவரி 2024 8:12:46 PM (IST)

வீட்டு மாடியில் சூரிய மின்சக்தி உற்பத்தி செய்யும் 1 கோடி வீடுகளுக்கு மாதந்தோறும் 300 யூனிட்வரை இலவச மின்சாரம் அளிக்கும் திட்டம் தொடங்கப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்தார்.

தங்கள் வீட்டு மாடியில் சூரிய மின்சக்தி தகடுகளை நிறுவி, சூரிய மின்சக்தி உற்பத்தி செய்யும் வீடுகளுக்கு மாதந்ேதாறும் 300 யூனிட் இலவச மின்சாரம் அளிக்கப்படும் என்று சமீபத்தில் இடைக்கால பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், இதற்கான ‘பிரதம மந்திரி சூரிய கார்-முப்தி பிஜிலி யோஜனா’ என்ற திட்டம் தொடங்கப்படுவதாக பிரதமர் மோடி நேற்று அறிவித்தார்.

இதுகுறித்து பிரதமர் மோடி தனது ‘எக்ஸ்’ வலைத்தள பக்கத்தில் கூறியிருப்பதாவது: நிலையான வளர்ச்சிையயும், மக்கள் நலனையும் அதிகரிக்க ‘பிரதம மந்திரி சூரிய சக்தி-இலவச மின்சார திட்டம்’ தொடங்கப்படுகிறது. இதற்கு ரூ.75 ஆயிரம் கோடி முதலீடு செய்யப்படுகிறது. தங்கள் வீட்டு மாடியில் சூரிய மின்சக்தி தகடுகளை நிறுவி சூரிய மின்சாரம் உற்பத்தி செய்யும் 1 கோடி வீடுகளுக்கு மாதந்தோறும் 300 யூனிட் வரை இலவச மின்சாரம் அளிப்பதே இத்திட்டத்தின் நோக்கம்.

இத்திட்டத்தில், கணிசமான மானியமும், அதிக சலுகைகளுடன் வங்கிக்கடன்களும் அளிக்கப்படும். பொதுமக்களின் வங்கிக்கணக்கில் நேரடியாக மானியம் செலுத்தப்படும். அவர்களுக்கு எந்த நிதிச்சுமையும் ஏற்படாமல் மத்திய அரசு பார்த்துக் கொள்ளும்.இந்த திட்டத்தால், பொதுமக்களுக்கு அதிக வருவாய் கிடைக்கும். மின்கட்டணம் குறையும். வேலைவாய்ப்பு உருவாகும். சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் தேசிய ஆன்லைன் வலைத்தளம் மூலம் இணைக்கப்படுகிறார்கள்.

திட்டத்தை கீழ்மட்ட அளவில் கொண்டுசெல்ல நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளும், ஊராட்சிகளும் ஊக்குவிக்கப்படும். எனவே, சூரிய மின்சக்தி உற்பத்தியை அதிகரிக்கவும், நிலையான வளர்ச்சியை ஏற்படுத்தவும் இத்திட்டத்தை வலுப்படுத்துமாறு பொதுமக்களை குறிப்பாக இளைஞர்களை கேட்டுக்கொள்கிறேன். அவர்கள் இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads








Arputham Hospital




Thoothukudi Business Directory