» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

சுற்றுலா பேருந்து மீது 2 லாரிகள் மோதி கோர விபத்து - 6 பேர் பலி!

சனி 10, பிப்ரவரி 2024 10:29:00 AM (IST)

நெல்லூர் அருகே 2 லாரிகள், சுற்றுலா பேருந்து மீது நேருக்கு நேர் மோதிய கோர விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

ஆந்திரம் மாநிலம், நெல்லூர் மாவட்டம் முசுனூர் சுங்கச்சாவடி அருகே இன்று சனிக்கிழமை அதிகாலை 2 மணியளவில் ஸ்ரீகாளஹஸ்தி நோக்கி எருதுகளை ஏற்றிக்கொண்டு ஒரு லாரியும், பின்னால் இரும்பு ஏற்றிச் சென்ற மற்றுமொரு லாரியும் சென்று கொண்டிருந்தது. 

இந்த நிலையில், இரும்பு ஏற்றிச் சென்ற லாரி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, எதிர்திசையில் வந்த தனியார் சுற்றுலாப் பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் சுற்றுலாப் பேருந்தில் பயணம் செய்தவர்களில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர், மேலும் 2 பேர் நெல்லூர் அரசு மருத்துவமனையில் இறந்தனர். மற்றும் 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

விபத்துக்குள்ளான சுற்றுலாப் பேருந்து சென்னை வடபழனியில் இருந்து நேற்று நள்ளிரவில் ஹைதராபாத் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில், நெல்லூர் அருகே சென்ற பஸ் இன்று அதிகாலை லாரியுடன் மோதி விபத்தில் சிக்கியுள்ளது.  இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital











Thoothukudi Business Directory