» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

இந்தியா தற்போது வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடாக மாறியுள்ளது: ஜனாதிபதி

புதன் 31, ஜனவரி 2024 11:56:09 AM (IST)

இந்தியா வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடாக மாறியுள்ளது என்று நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றினார். 

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனாதிபதி உரையுடன் தொடங்கியது. நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றி வருகிறார். அதில், நாடாளுமன்ற கூட்டுக்குழு கூட்டத்தில் முதல் முறையாக உரையாற்றுகிறேன். இடைக்கால் பட்ஜெட் கூட்டத் தொடர் புதிய நாடாளுமன்றத்தில் நடப்பது மகிழ்ச்சியளிக்கிறது. நமது அரசியல் சாசனம் அமல்படுத்தப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்து இருக்கிறது. அனைத்து கட்சியினரும் ஒத்த கருத்துடன் பயணிப்பார்கள் என நம்புகிறேன்.

ஒரே பாரதம், உன்னத பாரதம் என்ற இலக்குடன் பயணித்து வருகிறோம். இந்தியா தற்போது வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடாக மாறியுள்ளது. கடந்த 6 மாதங்களாக பொருளாதார வளர்ச்சி 7.5%க்கும் அதிகமாக உள்ளது. உலகின் 5 மிகப்பெரிய பொருளாதார நாடுகளில் ஒன்றாக இந்தியா வளர்ந்துள்ளது. வருமான வரி செலுத்துவோரின் எண்ணிக்கை 3 கோடியில் இருந்து 8 கோடியாக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் 5 ஜி தொழில்நுட்பம் மிக விரைவாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வரலாறு சிறப்புமிக்க மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவை நாடாளுமன்றம் நிறைவேற்றி உள்ளது. முத்தலாக் அமல், காஷ்மீர் விவகாரத்தில் தீர்வு உள்ளிட்டவை செய்து முடிக்கப்பட்டுள்ளது. நாட்டில் கடந்த 10 ஆண்டுகளில் 25 கோடி மக்கள் ஏழ்மையில் இருந்து மீண்டுள்ளனர். மீதமுள்ள ஏழை மக்களையும் ஏழ்மையில் இருந்து மீட்டெடுக்க முடியும். 

இந்தியா உலகின் இரண்டாவது மிகப்பெரிய கைபேசி உற்பத்தி செய்யும் நாடாக வளர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் பாதுகாப்புத்துறை உற்பத்தில் வழித்தடம் உருவாக்கப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக எதிர்பார்த்த மாற்றங்கள் கடந்த 10 ஆண்டுகளில் செயல்படுத்தப்பட்டுள்ளன என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital











Thoothukudi Business Directory