» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

வெள்ளி விழா கொண்டாட்டத்தில் விபத்து : சாப்ட்வேர் நிறுவனத்தின் சி.இ.ஓ பலி!

சனி 20, ஜனவரி 2024 3:59:37 PM (IST)



ஐதராபாத்தில் வெள்ளி விழா கொண்டாட்டத்தில் ஏற்பட்ட விபத்தில்
சாப்ட்வேர் நிறுவனத்தின் சி.இ.ஓ பரிதாபமாக உயிரிழந்தார். 

ஐதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் பிரபல சாப்ட்வேர் நிறுவனமான விஸ்டெக்ஸ் நிறுவனத்தின் வெள்ளி விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த விழாவில் விஸ்டெக்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சஞ்சய் ஷா (வயது 56) கலந்துகொண்டார்.

இந்த விழா கொண்டாட்டத்தின்போது மேடையில் இருந்த ஒரு இரும்புக் கூண்டுக்குள் சஞ்சய் ஷா மற்றும் அவரது சக ஊழியர் விஸ்வநாத் ராஜ் தட்லா இருவரும் ஏறினர். அந்த கூண்டு 20 அடி உயரத்தில் இருந்து கீழே இறக்கப்பட்டது. அப்போது அந்த கூண்டை தாங்கி கொண்டிருந்த இரும்புச் சங்கிலி ஒருபுறம் உடைந்ததில் இருவரும் கீழே விழுந்தனர்.

கீழே விழுந்த இருவரையும் அங்கு இருந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி சஞ்சய் ஷா உயிரிழந்தார். மேலும் மற்றொருவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். சஞ்சய் ஷா கீழே விழும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக நிறுவனத்தின் மற்றொரு அதிகாரி போலீசாரிடம் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் பிலிம் சிட்டி நிகழ்ச்சி நிர்வாகம் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் தொடர்ந்து சம்பவம் பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital








Thoothukudi Business Directory