» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான அவதூறு வழக்கு விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை!

சனி 20, ஜனவரி 2024 8:19:43 AM (IST)

எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான அவதூறு வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

போலி அ.தி.மு.க. உறுப்பினர் அட்டைகளை வழங்கி சட்டவிரோதமாக பணம் வசூலித்ததாக முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமிக்கு எதிராக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கில் தன்னை பற்றி அவதூறாக கூறியிருப்பதாக கூறி கே.சி.பழனிசாமி சென்னை ஜார்ஜ்டவுன் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை மாஜிஸ்திரேட்டு தள்ளுபடி செய்தார். இதை எதிர்த்து கே.சி.பழனிசாமி சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இதை விசாரித்த ஐகோர்ட்டு, கே.சி.பழனிசாமியின் அவதூறு வழக்கை தள்ளுபடி செய்து மாஜிஸ்திரேட்டு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ததோடு, அவதூறு வழக்கு விசாரணையை தொடர வேண்டுமென உத்தரவிட்டது.

இந்தநிலையில், தனக்கு எதிரான அவதூறு வழக்கை மீண்டும் விசாரிக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டதற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை நீதிபதிகள் பி.ஆர்.கவாய், சந்தீப்மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.

பொதுச்செயலாளராக ஜெயலலிதா இருந்தபோதே கட்சியில் இருந்து கே.சி.பழனிசாமியை நீக்கினார். அதன் பின்னர் கட்சி தொடர்பான அவரது செயல்பாடுகளை தடுக்கவே வழக்கு தொடரப்பட்டது. அதில் தெரிவித்த கருத்துகள் அவதூறானவை இல்லை என எடப்பாடி பழனிசாமி சார்பில் மூத்த வக்கீல் முகுல் ரோத்தகி வாதிட்டார்.

இதற்கு கே.சி.பழனிசாமி சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் கே.கே.வேணுகோபால் ஆட்சேபம் தெரிவித்தார். வாதங்களை பதிவு செய்து கொண்ட சுப்ரீம் கோர்ட்டு, எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கே.சி.பழனிசாமி தாக்கல் செய்துள்ள அவதூறு வழக்கு விசாரணைக்கு தடை விதித்ததுடன், இந்த வழக்கில் தற்போது உள்ள நிலையை தொடர வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital










Thoothukudi Business Directory