» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ரயில்வே வேலைக்கு லஞ்சம்: லாலு, தேஜஸ்வி யாதவுக்கு மீண்டும் அமலாக்கத்துறை சம்மன்!

வெள்ளி 19, ஜனவரி 2024 5:41:23 PM (IST)



ரயில்வே வேலைக்கு லஞ்சம் பெற்றதில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் குறித்து விசாரிக்க லாலு பிரசாத் மற்றும் தேஜஸ்வி யாதவ் ஆகியோருக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது.

கடந்த 2004 முதல் 2009-ஆம் ஆண்டு வரை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் ரயில்வே அமைச்சராக லாலு பிரசாத் யாதவ் பதவி வகித்தாா். அப்போது பாட்னாவைச் சோ்ந்த சிலரை ரயில்வேயின் குரூப்-டி பணிகளில் நியமிக்க, அவா்களுக்கு சொந்தமான நிலத்தை லஞ்சமாக குறைந்த விலைக்குப் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.

அவர்களுக்கு சொந்தமான நிலத்தை சந்தை மதிப்பைவிட குறைந்த விலைக்கு லாலு குடும்பத்தினா் நேரடியாக வாங்கியுள்ளனா் என்று சிபிஐயின் முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதுதொடா்பாக சட்டவிரோத பணப்பரிவா்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ், அமலாக்கத் துறையும் வழக்குப் பதிவு செய்துள்ளது.

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்துவதற்காக பிகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் ஜன.29ம் தேதியும், அவரது மகன் தேஜஸ்வி யாதவ் ஜன.30-ஆம் தேதியும் அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

ஏற்கனவே இந்த வழக்கின் விசாரணைக்கு ஆஜராகுமாறு கடந்த டிசம்பர் மாத இறுதியில் இருவருக்கும் அமலாக்கத்துறை அழைப்பாணை அனுப்பியிருந்தது. ஆனால் அப்போது அவர்கள் இருவரும் விசாரணைக்கு ஆஜராகவில்லை. 

முன்னதாக இந்த வழக்கில் தேஜஸ்வி யாதவிடம் 2023 ஏப்ரல் 11 ஆம் தேதி சுமார் எட்டு மணி நேரம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது. இந்த விவகாரத்தில் லாலு பிரசாத் யாதவ் குடும்பத்தின் நெருங்கிய நண்பரான அமித் கத்யால் கடந்த நவம்பர் மாதம் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து

இந்தியன்Jan 19, 2024 - 09:08:46 PM | Posted IP 162.1*****

அங்கேயும் பீடாவையான் கட்டுமரம் குடும்பம்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital








Thoothukudi Business Directory