» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

பில்கிஸ்பானு வழக்கு: சரணடைய அவகாசம் கோரி குற்றவாளிகள் மனு தாக்கல்!

வியாழன் 18, ஜனவரி 2024 5:31:54 PM (IST)

பில்கிஸ் பானு வழக்கில் சரணடைய அவகாசம் கோரி குற்றவாளிகள் கோவிந்த் பாய், ரமேஷ் ருபாய், மிதேஷ் சிமன்லால் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

கடந்த 2002ல் குஜராத்தில் இனக் கலவரம் நடந்தது. அப்போது, 21 வயதான, பில்கிஸ் பானு என்ற கர்ப்பிணி, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். அவரது, 3 வயது குழந்தை உட்பட, அவருடைய குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேர், வன்முறையாளர்களால் கொல்லப்பட்டனர்.

இந்த வழக்கில் தண்டனை பெற்ற, 11 பேரை முன்னதாகவே விடுதலை செய்து, குஜராத் அரசு உத்தரவிட்டது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள்,'' 11 பேரை முன்னதாக விடுதலை செய்ததை ரத்து செய்து உத்தரவிட்டனர்.

குற்றவாளிகள் 11 பேரும் வரும் ஜன.,21ம் தேதிக்குள் சரணடைய வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ''சரணடைய அவகாசம் கோரி குற்றவாளிகள் கோவிந்த் பாய், ரமேஷ் ருபாய், மிதேஷ் சிமன்லால் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

மனுவில்,''உறவினர்கள் திருமண நிகழ்ச்சி மற்றும் மருத்துவ சிகிச்சை உள்ளிட்ட காரணங்களால் சரணடைய அவகாசம் வேண்டும்'' எனக் கூறப்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் அனுமதியை பெற்று வழக்கு பட்டியலிடப்படும் என நீதிபதி பி.வி.நாகரத்னா தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Arputham Hospital






Thoothukudi Business Directory