» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ஆந்திராவில் சங்கராந்தி விடுமுறை நீட்டிப்பு: ஜன.22-ந்தேதி பள்ளிகள் திறப்பு!

வியாழன் 18, ஜனவரி 2024 12:15:36 PM (IST)

ஆந்திர பிரதேசத்தில் சங்கராந்தி விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால், வருகிற 22-ந்தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.

ஆந்திர பிரதேசத்தில் சங்கராந்தியை முன்னிட்டு பள்ளிகளின் திறப்பு தள்ளி வைக்கப்பட்டு உள்ளது. இதன்படி, நாளை மற்றும் நாளை மறுநாள் (19 மற்றும் 20) ஆகிய இரு நாட்கள் விடுமுறை நீட்டிக்கப்பட்டு உள்ளது. 21-ந்தேதி ஞாயிறு விடுமுறை ஆகும்.

இதனால், வருகிற 22-ந்தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இதற்கான விடுமுறை நீட்டிப்பு உத்தரவை அரசு வெளியிட்டது. ஆசிரியர் மற்றும் பெற்றோர் நலன்களுக்காக இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது என்று தெரிவித்து உள்ளது.

எனினும், அயோத்தியில் ராமர் கோவில் விழாவை முன்னிட்டு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு 22-ந்தேதியும் விடுமுறை அறிவிக்கப்படலாம் என்றும் 23-ந்தேதி கல்வி மையங்கள் திறக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், அதற்கான உத்தரவு எதுவும் இன்னும் பிறப்பிக்கப்படவில்லை.

ஆந்திர பிரதேசத்தில் சங்கராந்தி பண்டிகையையொட்டி, இதற்கு முன்பு கடந்த 9-ந்தேதியில் இருந்து 18-ந்தேதி (இன்று) வரை 10 நாட்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு இருந்தது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital











Thoothukudi Business Directory