» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

இந்தியா மிகப்பெரிய பொருளாதார நாடாக மாறும்: பிரதமர் மோடி உறுதி

வெள்ளி 8, டிசம்பர் 2023 5:46:38 PM (IST)

நான் 3வது முறையாக பிரதமர் பதவியில் இருக்கும் போது, இந்தியா நிச்சயம் , உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகளில் 3வது இடத்தில் இருக்கும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

உத்தரகண்ட் மாநிலத்தில் நடந்த சர்வதேச முதலீட்டாளர் மாநாட்டில் பிரதமர் மோடி பேசியதாவது: கடந்த சில ஆண்டுகளில் இந்தியா சிறப்பான வளர்ச்சி பெற்றுள்ளது. ஒரு காலத்தில் மக்களின் உரிமை பறிக்கப்பட்டது. ஆனால், தற்போது, அரசின் முயற்சிகள் மக்களை சென்றடைந்துள்ளன. 

5 ஆண்டுகளில் 13 கோடி பேர் வறுமையில் இருந்து மீண்டுள்ளனர். இவை பொருளாதாரத்திற்கு ஊக்கம் அளித்துள்ளது. இன்று நாட்டில் நுகர்வு சார்ந்த பொருளாதாரம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நான் 3வது முறையாக பிரதமர் பதவியில் இருக்கும் போது, உலகளவில் முதல் 3 பொருளாதாரங்களில் இந்தியா நிச்சயம் இடம்பெற்று இருக்கும் என பிரதமர் மோடி பேசினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads







Arputham Hospital





Thoothukudi Business Directory