» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்க பணம் பெற்ற புகாரில் மஹுவா மொய்த்ரா எம்.பி. பதவிநீக்கம்

வெள்ளி 8, டிசம்பர் 2023 5:06:18 PM (IST)

திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ராவை பதவிநீக்கம் செய்ய மக்களவையில் தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது. 

திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா, அதானி நிறுவனங்கள் தொடர்பாக நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப கோடிக்கணக்கான ரூபாய் லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக நாடாளுமன்ற நெறிமுறைக்குழு மஹுவா மொய்த்ராவிடம் விசாரணை நடத்தியது. இதன் முடிவில் அவரை எம்.பி. பதவியில் இருந்து நீக்க வேண்டும் என மத்திய அரசுக்கு பரிந்துரைத்தது.

இந்த நிலையில் இன்று மக்களவையில் கேள்வி நேரம் தொடங்கியபோது நெறிமுறைக் குழுவின் தலைவர் வினோத் குமார் சோன்கர், மஹுவா மொய்த்ரா பதவிநீக்கம் தொடர்பான பரிந்துரை அறிக்கையை தாக்கல் செய்தார்.

இதையடுத்து திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ராவை பதவிநீக்கம் செய்ய மக்களவையில் தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது. இந்த தீர்மானத்தை மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி முன்மொழிந்தார். தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்றது. விவாதத்திற்கு பின்னர் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தீர்மானத்தை கண்டித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். அதன்பின்னர் மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital










Thoothukudi Business Directory