» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
லட்சுமி கூட்டுறவு வங்கியின் வங்கியின் உரிமம் ரத்து: வாடிக்கையாளர்கள் லட்சக்கணக்கில் பணம் பெறலாம்!
வெள்ளி 23, செப்டம்பர் 2022 3:45:30 PM (IST)
லட்சுமி கூட்டுறவு வங்கியின் உரிமத்தை இந்திய ரிசர்வ் வங்கி ரத்து செய்துள்ளபோது வாடிக்கையாளர்கள் லட்சக் கணக்கில் பணம் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, சோலாபூரை தலைமையிடமாகக் கொண்டு செயப்பட்டு வரும் லட்சுமி கூட்டுறவு வங்கியிடம் போதுமான முதலீடு இல்லை, ஒழுங்குமுறைகளை சரியாக கடைபிடிக்கவில்லை என்றும், மேலும் வங்கியைத் தொடர அனுமதித்தால் பொது நலன் மோசமாக பாதிக்கப்படும். "கடன் வழங்குபவருக்கு போதுமான மூலதனம் மற்றும் வருவாய் வாய்ப்புகள் இல்லாததால் வங்கியின் உரிமத்தை ரிசர்வ் வங்கி ரத்து செய்துள்ளது மற்றும் வங்கியின் வர்த்தகம் தொடர்ந்து நடைபெற்றால் அதன் வைப்புதாரர்களின் நலன்கள் பாதிக்கப்படும்" என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
மேலும், வங்கு ஒழுங்குமுறை சட்டம், 1949, பிரிவு 56, உள்பிரிவு5(பி) இன்படி, வைப்புகளை ஏற்றுக்கொள்ளவும், வைப்புத்தொகையை திருப்பிச் செலுத்தவும் உடனடியாக தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு இன்று (செப்.23) முதல் அமலுக்கு வருகிறது.
மகாராஷ்டிரத்தின் கூட்டுறவு ஆணையர் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர், வங்கியை மூடுவதற்கான உத்தரவை வெளியிடுமாறும், வங்கியின் சொத்துகளை விற்பனை செய்வதற்கு ஒரு முகவரை நியமித்து உத்தரவு பிறப்பிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது.
வங்கி உரிமம் ரத்து செய்யப்பட்டு கலைக்கப்படுவதால், வங்கியின் ஒவ்வொரு வைப்புத்தொகையாளர்களும் டெபாசிட் இன்சூரன்ஸ் மற்றும் கிரெடிட் கேரண்டி கார்ப்பரேஷனிடம் இருந்து ரூ.5 லட்சம் வரையிலான வைப்புத்தொகை காப்பீட்டுக் கோரி உரிமை பெறலாம் என தெரிவித்துள்ளது.
வங்கி தரவுகளின் அடிப்படையில், சுமார் 99 சதவீத வைப்புத் தொகையாளர்கள் தங்கள் வைப்புத் தொகையின் முழுத் தொகையையும் டெபாசிட் இன்சூரன்ஸ் மற்றும் கிரெடிட் கேரண்டி கார்ப்பரேஷனிடம் (டிஐசிஜிசி) இருந்து பெற உரிமை பெறலாம்.
செப்டம்பர் 13 ஆம் தேதி நிலவரப்படி, வங்கியின் சம்பந்தப்பட்ட டெபாசிட்தாரர்களிடமிருந்து பெறப்பட்ட விருப்பத்தின் அடிப்படையில், மொத்த காப்பீடு செய்யப்பட்ட வைப்புத் தொகையில் ரூ.193 கோடியை லட்சுமி கூட்டுறவு வங்கி ஏற்கனவே செலுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் தனிப்பெரும்பான்மை பெறும்: திக்விஜய் சிங் நம்பிக்கை
வெள்ளி 1, டிசம்பர் 2023 11:25:36 AM (IST)

ஆயுர்வேத சிரப் குடித்த 5 பேர் உயிரிழப்பு: கடைக்காரர் உள்பட 3 பேர் கைது
வியாழன் 30, நவம்பர் 2023 5:29:52 PM (IST)

கூகுள் பே மூலம் ரீசார்ஜ் செய்தால் கூடுதல் கட்டணம்: பயனர்கள் அதிர்ச்சி!!
வியாழன் 30, நவம்பர் 2023 5:24:35 PM (IST)

தெலங்கானா சட்டப் பேரவை தேர்தல்: நடிகர்கள், பிரபலங்கள் ஓட்டுபோட்டனர்!
வியாழன் 30, நவம்பர் 2023 11:42:59 AM (IST)

தமிழகத்தில் மேலும் 4 நாட்களுக்கு கனமழை நீடிக்கும்: இந்திய வானிலை ஆய்வு மையம்
வியாழன் 30, நவம்பர் 2023 10:26:34 AM (IST)

மாதந்தோறும் 5 கிலோ இலவச தானியம் திட்டம்: மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு
புதன் 29, நவம்பர் 2023 5:44:26 PM (IST)
