தூத்துக்குடியின் வரலாறு (5 of 10)

தூத்துக்குடியில் ஆங்கிலேயர்கள்

கிபி 1782ல் ஆங்கில கிழக்கு இந்திய கம்பெனிக்கும், டச்சு கிழக்கு இந்திய கம்பெனிக்கும் போராட்டங்கள் கடுமையானது. ஆங்கில கம்பெனியின் இராணுவ ஆலோசகர் கர்னல் டோனால்ட் கம்பெல்லும், திருநெல்வேலி கலெக்டர் பவுணியும் டச்சு கம்பெனியாரை உடனே அடிபணியும்படி ஆணையிட்டனர்.
 
 ஓரு எதிர்ப்புமின்றி அவர்கள் உடனே சரணடைந்தனர். இதற்குபின் தூத்துக்குடி சிறிதுகாலம் ஆங்கிலேயரின் ஆளுகையிலேயே இருந்தது. கிபி 1810ல் கர்னல் டயசை அனுப்பி தூத்துக்குடியில் டச்சு கோட்டை தளவாடங்களை எல்லாம் தரைமட்டமாக்கினர்.
 
17ம் நூற்றாண்டில் புராட்டஸ்டண்ட்
 
கிபி 1542ல் புனித பிரான்சிஸ் சேவியர் என்ற ரோமன் கத்தோலிக்க மிஷனரி கன்னியாகுமரியை மையமாகக் கொண்டு ஊழியம் செய்து வந்ததோடு பல ஊழியர்களையும் அதன் சுற்றுப்புற கடற்கரைப் பகுதிகளுக்கு அனுப்பி ரோமன் கத்தோலிக்க சபையை நிருவினார்.
 
17ம் நூற்றாண்டின் துவக்கத்தில் புராட்டஸ்டண்ட் பிரிவைச் சேர்ந்த டச்சு நாட்டைச் சேர்ந்தவர்கள் வியாபார நோக்கோடு தூத்துக்குடி வந்தனர். பல எதிர்ப்புக்களுக்கு இடையே மீனவர்கள் மத்தியில் புராட்டஸ்டண்ட் சபைகளை நிருவ முயன்று தோல்வி அடைந்தனர். 1750ல் தாங்கள் ஆராதிப்பதாற்காக தற்போது ஆங்கில ஆலயம் என்று அழைக்கப்படும் பரிசுத்த திரித்துவ ஆலயத்தை கட்டினர். வரலாற்று சிறப்பு வாய்ந்த இந்த ஆலயத்தில் நடைபெற்ற ஆராதணையில் பங்குபெற்றவர்களில் கனம் ஸ்வார்ட்ஸ் ஐயரவர்கள், மிஷனரி ரிங்கள் தோபே மற்றும் போராயர் கால்டுவெல் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
 
1789ம் ஆண்டு தூத்துக்குடியிலிருந்த டச்சு கவர்னரின் வேண்டுகோளை ஏற்று கனம் ஸ்வார்ட்ஸ் ஐயரவர்கள் தரங்கம்பாடியிலிருந்து ராயப்பன், சத்தியநாதன் என்ற மிஷனெரரிகளை இப்பகுதியில் ஊழியம் செய்ய அனுப்பினார். இவர்களின் ஊழியத்தினால் 272பேர் ஞானஸ்தானம் பெற்று புராட்டஸ்டண்ட் திருச்சபையில் இணைந்தனர். வெகு காலமாக இவர்களுக்கு இவ்வாலயத்திலேய தமிழில் ஆராதணை நடத்தப்பட்டது. தூத்துக்குடியில் இந்த சபை 1789ம் ஆண்டு நிறுவப்பட்டது.

19ம் நூற்றாண்டில் தூத்துக்குடி

19ம் நூற்றாண்டின் தொடக்க வருடங்களில் தூத்துக்குடி வனிக உலகில் ஓர் மதிப்பான நிலையை எய்தியது. நகரத்தின் உற்பத்திபொருட்கள் ஒருபக்கம் வளர, அதன் பின்னணி (Hintedland) பிரதேசத்திலுள்ள கணிசமான மக்கள் தொகைக்கு வேண்டிய நுகர்வு பொருட்களையும், தொழில்களுக்கு வேண்டிய மூலப் பொருட்களையும் ஏற்றுமதி செய்ய தூத்துக்குடியில் ஓர் இயற்கை துறைமுகம், அதன்பின்புறம் வணிக செல்வத்தைப் பெருக்க ஓர் வளமான பிரதேசம் இருப்பதைக் கண்ட ஆங்கில கிழக்கு இந்திய கம்பெனி, தூத்துக்குடி துறைமுகத்தை மேம்பாடு செய்யத் திட்டமிட்டது.
 
1842ல் டச்சுக்காரர்கள் முயல்தீவில் கப்பலுக்கு வழிகாட்டும் கோபுரத்தை அகற்றி ஓர் கலங்கரை விளக்கை உருவாக்கியது. தூத்துக்குடி துறைமுக வளர்ச்சித் திட்ட வரலாற்றின் ஆரம்பம் என்று கூறலாம். வியாபாரம் துறையில் பல தீவிர மாற்றங்கள் ஏற்பட்டதால், இந்திய துறைமுகங்களில் தூத்துக்குடிக்கு ஓர் தனி சிறப்பு ஏற்பட்டது.


Favorite tagsThoothukudi Business Directory