» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் மறுசீரமைப்பு ஆலோசனைக் கூட்டம்!
செவ்வாய் 25, ஆகஸ்ட் 2026 10:10:05 AM (IST)

தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் வட்டார மற்றும் நகர மறுசீரமைப்பு ஆலோசனைக் கூட்டம் கோவில்பட்டியில் நடைபெற்றது
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநிலத் தலைவர் மாணிக்கம் தாகூர் அறிவுறுத்தலின்படி, தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் வட்டார மற்றும் நகர மறுசீரமைப்பு ஆலோசனைக் கூட்டம் கோவில்பட்டி காந்தி மண்டபத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு மாநில மேலிடப் பார்வையாளர் பூவை ஜேம்ஸ் நேரில் கலந்துகொண்டு அமைப்பின் சீரமைப்புப் பணிகள் குறித்து நிர்வாகிகளுக்கு வழிகாட்டுதல்களை வழங்கினார். தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியைச் சேர்ந்த அனைத்து நகர மற்றும் வட்டார நிர்வாகிகள் திரளாகக் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் மாவட்டத்தின் உட்கட்சி அமைப்புகளை வலுப்படுத்துவது, கட்சிப் பணிகளை வேகப்படுத்துவது மற்றும் வட்டார/நகர அளவில் புதிய நிர்வாகிகளை நியமித்து மறுசீரமைப்பு செய்வது குறித்து விரிவான கருத்துப் பரிமாற்றங்களும் ஆலோசனைகளும் மேற்கொள்ளப்பட்டன.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் அடுத்தடுத்து 3 பெண்களிடம் செல்போன், பணம் பறிப்பு - வாலிபர் கைது!
செவ்வாய் 25, ஆகஸ்ட் 2026 11:48:46 AM (IST)

திருச்செந்தூரில் 100 அடி தூரம் உள்வாங்கிய கடல்!
செவ்வாய் 25, ஆகஸ்ட் 2026 11:34:00 AM (IST)

தூத்துக்குடியில் பஸ் நிலையம் அருகே செல்போன் பறிப்பு: 2 பேருக்கு போலீஸ் வலைவீச்சு!
செவ்வாய் 25, ஆகஸ்ட் 2026 11:14:51 AM (IST)

தேசிய அளவிலான ஸ்கேட்டிங் போட்டிக்குத் தேர்வான தூத்துக்குடி மாணவருக்கு அமைச்சர் ஸ்ரீநாத் பாராட்டு!
செவ்வாய் 25, ஆகஸ்ட் 2026 11:02:37 AM (IST)

மதுபோதையில் தகராறு செய்த மகன் சரமாரியாக வெட்டிக்கொலை : தந்தை வெறிச்செயல்!
செவ்வாய் 25, ஆகஸ்ட் 2026 10:41:52 AM (IST)

தூத்துக்குடியில் வாகனம் மோதி ரவுடி பரிதாப பலி: போலீசார் தீவிர விசாரணை!
செவ்வாய் 25, ஆகஸ்ட் 2026 10:36:15 AM (IST)








