» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

திருச்செந்தூரில் 100 அடி தூரம் உள்வாங்கிய கடல்!

செவ்வாய் 25, ஆகஸ்ட் 2026 11:34:00 AM (IST)

TCRSeaUlwangi.jpg

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் பகுதியில் கடல் நீர் திடீரென 100 அடி தூரம் உள்வாங்கியதால், பாசி படர்ந்த அபாயகரமான பாறைகள் வெளியே தெரிந்தன.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கும், அய்யா வைகுண்டர் அவதார பதிக்கும் இடைப்பட்ட கடல் பகுதியில் ஒவ்வொரு மாதமும் வழக்கமாக அமாவாசை மற்றும் பவுர்ணமி நாட்கள், அதற்கு முந்தைய நாள் மற்றும் பிந்தைய நாட்களில் கடல் நீர் உள்வாங்குவது இயல்பான நிகழ்வாகும்.

இன்று காலை திருச்செந்தூர் கடலில் திடீரென சுமார் 100 அடி தூரத்திற்கு நீர் உள்வாங்கியது. நீர் உள்வாங்கியதால் கடலுக்குள் இருக்கும் பாசி படர்ந்த பாறைகள் வெளியே தென்பட்டன. இதைக் கண்ட பக்தர்கள் பலர் ஆபத்தை உணராமல், அந்தப் பாறைகள் மீது ஏறி நின்று செல்ஃபி மற்றும் புகைப்படங்கள் எடுத்தனர்.

கடல் உள்வாங்கிய பகுதியிலும், பாறைகள் மீதும் ஆபத்தான முறையில் நின்றிருந்த பக்தர்களுக்குக் காவல்துறையினர் மற்றும் கோவில் கடற்கரைப் பாதுகாப்புப் பணியாளர்கள் உடனடியாக எச்சரிக்கை விடுத்து அப்பகுதியில் இருந்து பாதுகாப்பாக வெளியேற்றினர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory