» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மதுபோதையில் தகராறு செய்த மகன் சரமாரியாக வெட்டிக்கொலை : தந்தை வெறிச்செயல்!
செவ்வாய் 25, ஆகஸ்ட் 2026 10:41:52 AM (IST)
தூத்துக்குடி அருகே மதுபோதையில் தினமும் தகராறில் ஈடுபட்டு வந்த மகனைத் தந்தையே அரிவாளால் சரமாரியாக வெட்டிக்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் எப்போதும் வென்றான் அருகிலுள்ள ஆதனூர் கிராமம் நடுத்தெருவைச் சேர்ந்தவர் மாரிமுத்து (50). இவரது மகன் கருப்பசாமி (21). இவர் சரியாக வேலைக்குச் செல்லாமல், நாள்தோறும் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்து பெற்றோர் மற்றும் குடும்பத்தினருடன் தகராறு செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
நேற்று இரவும் வழக்கம் போல மதுபோதையில் வீட்டிற்கு வந்த கருப்பசாமி, தந்தை மாரிமுத்துவிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். மகனின் தொடர் தொந்தரவால் ஆத்திரமடைந்த மாரிமுத்து, தான் பெற்ற மகன் என்றும் பாராமல் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்துச் சரமாரியாக வெட்டினார். இதில் பலத்த வெட்டுக்காயமடைந்த கருப்பசாமி, ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்து வந்த எப்போதும் வென்றான் காவல் நிலையப் போலீசார், கருப்பசாமியின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இக்கொலை தொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், தந்தை மாரிமுத்துவைக் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் அடுத்தடுத்து 3 பெண்களிடம் செல்போன், பணம் பறிப்பு - வாலிபர் கைது!
செவ்வாய் 25, ஆகஸ்ட் 2026 11:48:46 AM (IST)

திருச்செந்தூரில் 100 அடி தூரம் உள்வாங்கிய கடல்!
செவ்வாய் 25, ஆகஸ்ட் 2026 11:34:00 AM (IST)

தூத்துக்குடியில் பஸ் நிலையம் அருகே செல்போன் பறிப்பு: 2 பேருக்கு போலீஸ் வலைவீச்சு!
செவ்வாய் 25, ஆகஸ்ட் 2026 11:14:51 AM (IST)

தேசிய அளவிலான ஸ்கேட்டிங் போட்டிக்குத் தேர்வான தூத்துக்குடி மாணவருக்கு அமைச்சர் ஸ்ரீநாத் பாராட்டு!
செவ்வாய் 25, ஆகஸ்ட் 2026 11:02:37 AM (IST)

தூத்துக்குடியில் வாகனம் மோதி ரவுடி பரிதாப பலி: போலீசார் தீவிர விசாரணை!
செவ்வாய் 25, ஆகஸ்ட் 2026 10:36:15 AM (IST)

உப்பள நிலங்கள் கையகப்படுத்துவதைக் கைவிட வேண்டும்: நெல்லை முபாரக் வலியுறுத்தல்!
செவ்வாய் 25, ஆகஸ்ட் 2026 10:28:38 AM (IST)








