» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.1.60 லட்சம் திருட்டு: 2பேர் கைது
செவ்வாய் 9, டிசம்பர் 2025 11:27:08 AM (IST)

தூத்துக்குடியில் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.1.60 லட்சம் திருடிய வழக்கில் ரவுடி உட்பட 2பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி பி அன் டி காலனி, 7வது தெருவைச் சேர்ந்தவர் ஜான்சன் மகள் ட்ரிபினா திலைக் (23). இவர் கடந்த 7ஆம் தேதி இரவு வீட்டை அடுத்த தெருவில் உள்ள தாத்தா வீட்டிற்கு சென்றுவிட்டார். நேற்று காலை திரும்பி வந்துள்ளார். அப்போது அவரது வீட்டின் கதவில் உடைக்கப்பட்டிருந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த அவர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த ரூ.1லட்சத்து 60ஆயிரம் பணம் திருடு போயிருந்தது. இதுகுறித்து அவர் சிப்காட் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் தனசேகரன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினார்.
விசாரணையில் தாளமுத்துநகர் இந்திரா நகரைச் சேர்ந்த மாரிமுத்து மகன் சிவா (எ) ஜீவா (19), அம்பேத்கர் நகர் சுரேஷ் மகன் பிரவீன் (20) ஆகிய 2பேரும் பணத்தை திருடியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 2பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.93ஆயிரம் பணம் மீட்கப்பட்டுள்ளது. கைதான சிவா மீது வழிப்பறி உட்பட 6 வழக்குகள் இருப்பதாகவும், ரவுடி பட்டியலில் உள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

10ம் வகுப்பு பொது தேர்வு எழுதவுள்ள மாணவிகளுக்கு மஞ்சப்பை வழங்கி வாழ்த்திய சார் ஆட்சியர்
செவ்வாய் 10, மார்ச் 2026 8:19:24 PM (IST)

ஈரானிலிருந்து மெழுகு இறக்குமதியில் சிக்கல்: தமிழகத்தில் தீப்பெட்டி தொழில் முடங்கும் அபாயம்
செவ்வாய் 10, மார்ச் 2026 8:05:18 PM (IST)

ஊரக வேலை உறுதி திட்டத்தில் குறைதீர்ப்பாளர் நியமனம் : ஆட்சியர் க.இளம்பகவத் தகவல்!
செவ்வாய் 10, மார்ச் 2026 5:02:57 PM (IST)

குடியிருப்பிற்குள் புகுந்த 4 அடி நீள சாரைப்பாம்பு - தீயணைப்பு வீரர்கள் துரித நடவடிக்கை!
செவ்வாய் 10, மார்ச் 2026 4:15:26 PM (IST)

தென்னிந்தியாவில் சிலிண்டர் தட்டுப்பாடு: மத்திய அரசு தலையிட கனிமொழி எம்.பி. வலியுறுத்தல்
செவ்வாய் 10, மார்ச் 2026 3:49:14 PM (IST)

தூத்துக்குடியில் காடாக மாறிய மாநகராட்சி பூங்கா: சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை!
செவ்வாய் 10, மார்ச் 2026 12:49:00 PM (IST)








