» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் காடாக மாறிய மாநகராட்சி பூங்கா: சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை!
செவ்வாய் 10, மார்ச் 2026 12:49:00 PM (IST)

தூத்துக்குடி கங்கா பரமேஸ்வரி நகரில் புதர்கள் மண்டி காடு போலக் காட்சியளிக்கும் பூங்காவை முறையாக பராமரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நடைபயிற்சி மேற்கொள்ளும் பாதைகள் மற்றும் சிறுவர் விளையாட்டு உபகரணங்கள் அனைத்தும் முட்செடிகளால் சூழப்பட்டுள்ளன. இதனால் பொதுமக்கள் பூங்காவைப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பூங்காவின் பின்புறத்தில் பல மாதங்களாக மழைநீர் தேங்கிக் கிடப்பதால், கடும் சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டுள்ளது. புதர்கள் மற்றும் தேங்கிய நீரால் பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாகப் பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து தூத்துக்குடி பாஜக சமூக ஊடகப்பிரிவு மாநிலச் செயலாளர் காளி ராஜா கூறுகையில், "மாநகராட்சியின் அலட்சியத்தால் மக்களின் ஓய்வு நேரத்திற்காக அமைக்கப்பட்ட பூங்கா தற்போது அச்சுறுத்தும் இடமாக மாறியுள்ளது. தேங்கியுள்ள மழைநீரை அகற்றி, புதர்களைச் சுத்தம் செய்து, மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் வகையில் பூங்காவைச் சீரமைக்க மேயரும், ஆணையாளரும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்," என வலியுறுத்தினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

10ம் வகுப்பு பொது தேர்வு எழுதவுள்ள மாணவிகளுக்கு மஞ்சப்பை வழங்கி வாழ்த்திய சார் ஆட்சியர்
செவ்வாய் 10, மார்ச் 2026 8:19:24 PM (IST)

ஈரானிலிருந்து மெழுகு இறக்குமதியில் சிக்கல்: தமிழகத்தில் தீப்பெட்டி தொழில் முடங்கும் அபாயம்
செவ்வாய் 10, மார்ச் 2026 8:05:18 PM (IST)

ஊரக வேலை உறுதி திட்டத்தில் குறைதீர்ப்பாளர் நியமனம் : ஆட்சியர் க.இளம்பகவத் தகவல்!
செவ்வாய் 10, மார்ச் 2026 5:02:57 PM (IST)

குடியிருப்பிற்குள் புகுந்த 4 அடி நீள சாரைப்பாம்பு - தீயணைப்பு வீரர்கள் துரித நடவடிக்கை!
செவ்வாய் 10, மார்ச் 2026 4:15:26 PM (IST)

தென்னிந்தியாவில் சிலிண்டர் தட்டுப்பாடு: மத்திய அரசு தலையிட கனிமொழி எம்.பி. வலியுறுத்தல்
செவ்வாய் 10, மார்ச் 2026 3:49:14 PM (IST)

போலி காப்பீடு தயாரித்து மோசடி: 5 பேர் கைது - தூத்துக்குடி பொருளாதார குற்றப்பிரிவு அதிரடி
செவ்வாய் 10, மார்ச் 2026 11:49:29 AM (IST)








