» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

குடியிருப்பிற்குள் புகுந்த 4 அடி நீள சாரைப்பாம்பு - தீயணைப்பு வீரர்கள் துரித நடவடிக்கை!

செவ்வாய் 10, மார்ச் 2026 4:15:26 PM (IST)



தூத்துக்குடி கோரம்பள்ளம் அருகே குடியிருப்பிற்குள் புகுந்த 4 அடி நீள சாரைப்பாம்பைத் தீயணைப்பு வீரர்கள் பாதுகாப்பாக மீட்டு வனப்பகுதியில் விட்டனர்.

தூத்துக்குடி மாவட்டம், கோரம்பள்ளம் சிவசக்தி நகரைச் சேர்ந்தவர் காஞ்சனாதேவி. இன்று இவரது வீட்டின் முன்பகுதிக்குச் சொகுசாக ஒரு பாம்பு நுழைவதைக் கண்ட குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து உடனடியாக சிப்காட் தீயணைப்பு நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும், நிலைய அலுவலர் த. கார்த்திகேயன் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். 

வீட்டின் முன்புறம் இருந்த செடிகளுக்கு இடையே பதுங்கியிருந்த சுமார் 4 அடி நீளமுள்ள சாரைப்பாம்பை வீரர்கள் லாவகமாகப் பிடித்தனர். பிடிபட்ட சாரைப்பாம்பு பின்னர் ஆள் நடமாட்டம் இல்லாத பாதுகாப்பான வனப்பகுதியில் கொண்டு போய் விடப்பட்டது. குடியிருப்புப் பகுதிக்குள் பாம்பு புகுந்த இச்சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது. தீயணைப்பு வீரர்களின் இந்தத் துரித நடவடிக்கையைப் பொதுமக்கள் பாராட்டினர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





Arputham Hospital




Thoothukudi Business Directory