» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பனை ஓலை வெட்ட முயன்றவர் தவறி விழுந்து உயிரிழப்பு : தூத்துக்குடியில் பரிதாபம்!
திங்கள் 8, டிசம்பர் 2025 4:23:58 PM (IST)
தூத்துக்குடியில் வீட்டின் மொட்டை மாடியில் இருந்து பனை ஓலைகளை வெட்ட முயன்றபோது, தவறி விழுந்து, மரம் வெட்டும் தொழிலாளி பரிதாபமாக இறந்தார.
தூத்துக்குடி அத்திமரப்பட்டி பொன்னகரம் பகுதியைச் சேர்ந்தவர் பக்கிள் மகன் முத்துமாரி (49), உடைமரம் வெட்டும் தொழில் செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி பேச்சியம்மாள் என்ற மனைவியும் மூன்று மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். இவர் கடந்த 3ஆம் தேதி தனது வீட்டின் மொட்டை மாடியில் ஏறி அருகில் இருந்த பனைமரத்தின் ஓலையை வெட்டிக் கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக திடீரென கால் தவறி வீட்டின் கழிவறையில் விழுந்தார். இதில் பலத்த காயம் அடைந்த அவரை தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று இரவு பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து முத்தையாபுரம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஷோபா ஜென்சி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கோவில்பட்டியில் 2 கிலோ கஞ்சா பறிமுதல்: வாலிபர் கைது
செவ்வாய் 9, டிசம்பர் 2025 9:37:40 PM (IST)

காவல்நிலையத்தில் சித்ரவதை செய்து படுகொலை: உதவி ஆய்வாளருக்கு ரூ.3 லட்சம் அபராதம்
செவ்வாய் 9, டிசம்பர் 2025 8:48:45 PM (IST)

தூத்துக்குடி மாநகராட்சியில் 10ம் தேதி பகுதி சபா கூட்டம் : ஆணையர் ப்ரியங்கா தகவல்
செவ்வாய் 9, டிசம்பர் 2025 8:42:50 PM (IST)

தூத்துக்குடியில் கொலை வழக்கில் கைதான 2பேர் மீது குண்டா் சட்டம் பாய்ந்தது!
செவ்வாய் 9, டிசம்பர் 2025 8:10:50 PM (IST)

நீதிபதியை விமர்சித்த திமுக எம்எல்ஏ மகன் மீது காவல் நிலையத்தில் இந்து முன்னணி புகார்
செவ்வாய் 9, டிசம்பர் 2025 8:03:56 PM (IST)

தூத்துக்குடி-மைசூர் கிறிஸ்துமஸ், புத்தாண்டு சிறப்பு ரயில்கள் : தெற்கு ரயில்வே அறிவிப்பு!
செவ்வாய் 9, டிசம்பர் 2025 7:57:20 PM (IST)










