» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கிறிஸ்தவ ஆலயத்தில் புதிய பங்குதந்தைக்கு எதிர்ப்பு : தூத்துக்குடியில் பரபரப்பு

ஞாயிறு 7, டிசம்பர் 2025 8:40:33 PM (IST)



தூத்துக்குடியில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்தில் புதிய பங்கு தந்தைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு தரப்பினர் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 

தூத்துக்குடி இன்னாசியார்புரத்தில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்தில் பங்குத்தந்தையாக பணியாற்றி வந்தவர் மீது பல்வேறு புகாரின் பேரில் பதவி நீக்கம் செய்யப்பட்டார். இந்த நிலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) சிறப்பு வழிபாட்டை முன்னிட்டு தற்காலிகமாக பொறுப்பேற்றுள்ள புதிய பங்குத்தந்தை ஆலயத்திற்கு வந்தார். அவரை உள்ளே விடாமல் பதவி நீக்கம் ஏற்பட்ட பங்கு தந்தையின் ஆதரவாளர்கள் தடுத்து வாக்குவாதம் செய்தனர்.

இதனால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து வடபாகம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு போலீசார் சென்று சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் சுமார் அரை மணி நேரம் ஜெப ஆராதனை நடைபெறவில்லை. பின்னர் போலீஸ் பாதுகாப்புடன் ஜெப ஆராதனைகள் நடந்தது. இதனால் ஆலயத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.


மக்கள் கருத்து

அவுங்கDec 11, 2025 - 12:19:03 PM | Posted IP 162.1*****

ஸ்தோத்திரம் ஆண்டவரே

இவனுங்கDec 8, 2025 - 01:12:38 AM | Posted IP 172.7*****

எல்லாம் கிறிஸ்டினா

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital







Thoothukudi Business Directory