» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி ரேஷன் கடையில் அமைச்சர் கீதாஜீவன் திடீா் ஆய்வு

ஞாயிறு 7, டிசம்பர் 2025 8:22:49 PM (IST)



தூத்துக்குடி அசோக்நகா் ரேஷன் கடையில் அமைச்சர் கீதாஜீவன் திடீா் ஆய்வு மேற்கொண்டார். 

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட வாா்டு 34 பகுதியில் உள்ள அசோக்நகா் 2ம் தெருவில் உள்ள ரேஷ்கடையில் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிா் உாிமைத்துறை அமைச்சா் கீதாஜீவன் திடீரென ஆய்வு மேற்காெண்டாா். பணியில் இருந்த அலுவலா்களிடம் எல்லா பொருட்களும் சாியாக வந்து சோ்கிறதா பொதுமக்களுக்கு பொருட்கள் முறையாக வழங்குகிறீா்களா? என்று கேட்டாா். 

அப்போது முறையாக வருகின்ற பொருட்களை வழங்கி வருகிறேன் என்றாா். பின்னா் அமைச்சா் பொருட்கள் எதுவும் குறைவாக வந்தாலும் தரமான பொருட்களாக இல்லாமல் இருந்தாலும் உடனடியாக தகவல் தொிவிக்க வேண்டும் இருப்பு இல்லை என்றால் அதை முறையாக பொதுமக்களுக்கு தங்களது விளம்பர பலகை மூலம் தொிவித்து எந்த தேதியில் பெற்றுக்கொள்ளலாம் என்ற விபரத்தையும் பதிவு செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டாா். ஆய்வின் போது மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், பகுதிசெயலாளர் ஜெயக்குமாா், வட்டப்பிரதிநிதி பாஸ்கா், மற்றும் மணி அல்பட் உடனிருந்தனா்.


மக்கள் கருத்து

ஏம்பாDec 7, 2025 - 10:08:21 PM | Posted IP 172.7*****

கொஞ்சம் சாலையை கவனிங்க

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital








Thoothukudi Business Directory