» செய்திகள் - விளையாட்டு » அரசியல்
வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி: விஜய்க்கு ரஜினி, கமல் உள்ளிட்ட திரையுலகப் பிரபலங்கள் வாழ்த்து!
செவ்வாய் 5, மே 2026 11:43:27 AM (IST)

தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் 105-க்கும் மேற்பட்ட இடங்களைக் கைப்பற்றி, தமிழக வெற்றி கழகம் (தவெக) தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. இந்த வரலாற்றுச் சாதனைக்காகத் தவெக தலைவர் விஜய்க்கு, திரையுலகைச் சேர்ந்த ஜம்பவான்கள் பலரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
• ரஜினிகாந்த்: நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் பெரும் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகத் தலைவர் திரு. விஜய் அவர்களுக்கும், அவர் கட்சியினருக்கும் என்னுடைய வாழ்த்துகள்.
• கமல்ஹாசன்: தங்களுடைய முதல் தேர்தலிலேயே மக்களுடைய நம்பிக்கையைப் பெற்று பெருவெற்றி பெற்றிருக்கும் தவெக தலைவர் திரு. விஜய் அவர்களுக்கும், அவரது கட்சியினருக்கும் பாராட்டுகள். மக்கள் பணி சிறக்க வாழ்த்துகள்.
• சூர்யா: நண்பர் விஜய் மீது தமிழ்நாடு பெரிய நம்பிக்கை வைத்திருக்கிறது. தமிழக அரசியலில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கவிருக்கும் அவருக்கு என் மனப்பூர்வமான வாழ்த்துகள்.
• கார்த்தி: விஜய் சார், மக்கள் உங்கள் மீது கொண்டுள்ள அன்பு ஈட்டியுள்ள இந்த வெற்றி உண்மையிலேயே வரலாற்றுச் சிறப்புமிக்கது. உங்கள் கனவுகள் நிறைவேற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
• தனுஷ்: களத்துக்கு வந்து போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே மக்களின் பெரும் ஆதரவைப் பெற்று ஆட்சியமைக்கவிருக்கும் திரு. விஜய் சார் அவர்களுக்கும் தவெக-விற்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்.
• சிவகார்த்திகேயன்: முதல் தேர்தலிலேயே இவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய விஜய் சாருக்கு வாழ்த்துகள். நீங்கள் திரைத்துறையைச் சார்ந்தவர் என்பதில் கூடுதல் மகிழ்ச்சி.
• ஏ.ஆர். ரஹ்மான்: அன்புள்ள விஜய் அவர்களுக்கு, ஊழலற்ற அரசியல், சமூக நீதி ஆகியவற்றை முன்னிறுத்தி, தமிழ்நாட்டை முன்னுக்குக் கொண்டு செல்லும் சிறந்த தலைவராக நீங்கள் வளர வாழ்த்துகள். சென்னை நகரத்தைக் கலை மற்றும் செழிப்பு நிறைந்ததாக மாற்றும் உங்கள் பணி சிறக்கட்டும்.
மலையாளத் திரையுலகின் வாழ்த்துகள்
மோகன்லால், பொதுமக்கள் உங்களை தேர்வு செய்துள்ளதாகவும், அவர்கள் உங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையே, மிகப்பெரிய கெளரவம் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் மக்கள் உங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையோடு, மக்கள் சேவைக்கான தங்களின் புதிய பயணம் உத்வேகத்துடன் தொடங்கட்டும் என்றும் நடிகர் மோகன்லால் பதிவிட்டுள்ளார்.
மம்மூட்டி மாநிலத்தை வழிநடத்தும் மனவலிமை த.வெ.க தலைவர் விஜய்க்கு கிடைக்க தான் வாழ்த்துவதாகவும் பதிவிட்டுள்ளார்.
தெலுங்குத் திரையுலகின் வாழ்த்துகள்
விஜய்யின் இந்த வெற்றி அண்டை மாநிலமான ஆந்திரா மற்றும் தெலங்கானாவிலும் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.
• சிரஞ்சீவி: அன்புள்ள விஜய், உங்களது முதல் தேர்தலில் கிடைத்துள்ள இந்த சிறப்பான வெற்றிக்கு மனமார்ந்த வாழ்த்துகள். தளராத ஆர்வத்தோடு நீங்கள் தொடர்ந்து மக்களுக்குச் சேவை செய்ய வேண்டுகிறேன்.
• மகேஷ்பாபு: பிரமிக்கத்தக்க வெற்றியைப் பெற்றுள்ள நடிகர் விஜய்க்கு வாழ்த்துகள்! இந்த வெற்றி தமிழகத்திற்கு அர்த்தமுள்ள முன்னேற்றமாக மாறும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
• நானி: முதலில் சந்தேகிக்கப்பட்டு, பின் மகுடம் சூட்டப்பட்டிருக்கிறது. அடிமட்டத்திலிருந்து ஒருவர் வெற்றி பெறுவது என்பது ஒரு முழுமையான சினிமா போன்றது. தமிழக மக்களுக்கு இதன் மூலம் நன்மைகள் தொடரும் என நம்புகிறேன்.
திரைத்துறையில் இருந்து அரசியல் பயணத்தைத் தொடங்கிய விஜய், முதல் முயற்சியிலேயே இமாலய வெற்றியைப் பெற்று ஆட்சியமைக்கும் நிலைக்கு உயர்ந்துள்ளது இந்திய அரசியலில் ஒரு முக்கியத் திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026: கட்சி மாறிப் போட்டியிட்டு வென்ற முக்கியப் புள்ளிகள்!
செவ்வாய் 5, மே 2026 10:24:08 AM (IST)

வாக்கு எண்ணிக்கை மையங்களில் கூடுதல் கவனம் : முகவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அட்வைஸ்!
வியாழன் 30, ஏப்ரல் 2026 4:53:56 PM (IST)

யாருக்கு வெற்றி? இன்று மாலை வெளியாகிறது எக்ஸிட் போல்: தமிழக மக்கள் மிகுந்த ஆர்வம்!
புதன் 29, ஏப்ரல் 2026 8:17:55 AM (IST)

தமிழகத்தில் 85% வாக்குகள் பதிவு : 74 ஆண்டு கால வரலாற்றில் புதிய சாதனை!
வியாழன் 23, ஏப்ரல் 2026 7:58:36 PM (IST)

திமுக ஒருபோதும் இந்துக்களுக்கு எதிரான கட்சி அல்ல: முதல்வர் ஸ்டாலின் விளக்கம்
செவ்வாய் 21, ஏப்ரல் 2026 10:21:00 AM (IST)

பெண்களுக்கு மிகப்பெரிய அநீதி இழைப்பு: திமுகவிற்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்
சனி 18, ஏப்ரல் 2026 5:01:01 PM (IST)









