» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

மின் ரீடிங் குளறுபடிகள் தீரும் வரை கட்டணம் செலுத்த அவகாசம் வேண்டும்: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!

வெள்ளி 31, ஜூலை 2026 11:54:26 AM (IST)

தமிழகத்தில் மின்சாரப் பயன்பாட்டைக் கணக்கெடுக்கும் பணி சரியான முறையில் மேற்கொள்ளப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். 

இச்சம்பவம் குறித்து திமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு வெளியிட்ட பதிவில், "3.70 லட்சம் குடும்பங்களுக்குக் கூடுதல் மின்கட்டணம் வசூலிக்கப்பட்டதை ஒப்புக்கொண்டு, தன் நிர்வாகத் திறமையின்மையை வெட்டவெளிச்சமாக்கியுள்ளது தவெக அரசு. ஆட்சிக்கு வந்த சில மாதங்களிலேயே மக்கள் தலையில் அநியாயப் பொருளாதாரச் சுமையைச் சுமத்தியுள்ள இந்த மக்கள் விரோத அரசு இனியாவது திருந்தட்டும்" எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனை மேற்கோள் காட்டி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது: "3.70 லட்சம் குடும்பங்கள் கூடுதல் மின்கட்டணம் தொடர்பாகப் புகாரளித்திருப்பதை அரசே வேறு வழியின்றி ஒப்புக்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. சமூக ஊடகங்களில் பொதுமக்களின் குமுறலைப் பார்க்கும்போது, இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்னும் பலமடங்கு இருக்கக்கூடும் என்பது உறுதியாகிறது. 

இந்த மின் ரீடிங் குளறுபடிகள் குறித்து முழுமையாக ஆய்வு செய்யப்பட்டுத் தீர்வு காணப்படும் வரை, பொதுமக்கள் மின்கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும். மேலும், இனிவரும் காலங்களில் மின்சாரப் பயன்பாட்டைக் கணக்கெடுக்கும் பணியைச் சரியான முறையில் மேற்கொள்வதை அரசு உறுதி செய்ய வேண்டும்." இவ்வாறு அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads








Thoothukudi Business Directory