» செய்திகள் - விளையாட்டு » அரசியல்
தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026: கட்சி மாறிப் போட்டியிட்டு வென்ற முக்கியப் புள்ளிகள்!
செவ்வாய் 5, மே 2026 10:24:08 AM (IST)

நடைபெற்று முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில், தங்களின் தாய் கட்சிகளிலிருந்து விலகி, மாற்று முகாம்களில் இணைந்து களம் கண்ட பல முக்கிய தலைவர்கள் வெற்றிக் கனியைப் பறித்துள்ளனர்.
குறிப்பாக அதிமுக, திமுக மற்றும் விசிக ஆகிய கட்சிகளிலிருந்து வெளியேறிப் போட்டியிட்டவர்களுக்கு மக்கள் ஆதரவு அளித்துள்ளனர்.
அவ்வாறு கட்சி மாறி வெற்றி பெற்றவர்களின் விவரம்:
திமுகவில் இணைந்த முன்னாள் அதிமுக அமைச்சர்கள்:
அதிமுகவின் கோட்டையாகக் கருதப்பட்ட மண்டலங்களில் இருந்து விலகி, திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முக்கியப் புள்ளிகள்:
• ஓ. பன்னீர்செல்வம் (முன்னாள் முதல்வர், அதிமுக ⮕ திமுக)
• வைத்திலிங்கம் (முன்னாள் அமைச்சர், அதிமுக ⮕ திமுக)
• மனோஜ் பாண்டியன் (முன்னாள் எம்.எல்.ஏ, அதிமுக ⮕ திமுக)
தவெக - 'மாற்று முகாம்' வேட்பாளர்களின் அதிரடி வெற்றி:
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய், இந்தத் தேர்தலில் போட்டியிட்ட 232 வேட்பாளர்களில் 106 பேருக்கு மாற்று கட்சிகளிலிருந்து வந்தவர்களுக்கு வாய்ப்பளித்திருந்தார். அவர்களில் வெற்றி பெற்ற மிக முக்கியமானவர்கள்:
கே.ஏ. செங்கோட்டையன் அதிமுக ⮕தவெக
சத்யபாமா அதிமுக ⮕தவெக
நிர்மல் குமார் அதிமுக ⮕தவெக
ஆதவ் அர்ஜூனா விசிக ⮕தவெக
லோகேஷ் தமிழ்செல்வன் அதிமுக ⮕தவெக
வி.எஸ். பாபு அதிமுக ⮕தவெக
கருப்பையா அதிமுக ⮕தவெக
ஜே.சி.டி. பிரபாகர் அதிமுக ⮕தவெக
முருகன் திமுக ⮕தவெக
இந்தத் தேர்தலில் தவெகவின் வெற்றிக்கு, பிற கட்சிகளில் இருந்து வந்த அனுபவம் வாய்ந்த தலைவர்களின் களப்பணியும், அவர்கள் தங்களின் பழைய தொகுதிகளில் வைத்திருந்த செல்வாக்கும் முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது. அதேபோல், அதிமுகவின் கோட்டைகளாகக் கருதப்பட்ட பகுதிகளில் அக்கட்சியின் முன்னாள் சீனியர் அமைச்சர்கள் திமுக மற்றும் தவெக சார்பில் வென்றிருப்பது தமிழக அரசியலில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழ்நாட்டு மக்களுக்காக அவமானத்தையும் தாங்க நான் தயார்: முதலமைச்சர் விஜய்!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 10:42:14 AM (IST)

மின் ரீடிங் குளறுபடிகள் தீரும் வரை கட்டணம் செலுத்த அவகாசம் வேண்டும்: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!
வெள்ளி 31, ஜூலை 2026 11:54:26 AM (IST)

அரசு மருத்துவமனைகளில் குறைகளைக் களைய 50 அதிகாரிகள் நியமனம்: சுகாதாரத்துறை அதிரடி!
சனி 11, ஜூலை 2026 12:06:38 PM (IST)

தவெக அரசு தமிழகத்திற்கு நல்லது செய்தால் வரவேற்போம்: அண்ணாமலை விளக்கம்!
திங்கள் 6, ஜூலை 2026 5:17:54 PM (IST)

திமுக முக்கியப் பிரமுகர் திருமண விழாவில் உதயநிதி ஸ்டாலின் - சீமான் திடீர் சந்திப்பு!
திங்கள் 6, ஜூலை 2026 4:49:59 PM (IST)

தமிழகத்தின் முதலமைச்சராக விஜய் தொடர்வார்: வைகோ நம்பிக்கை - திமுக மீது கடும் விமர்சனம்!
செவ்வாய் 30, ஜூன் 2026 3:47:32 PM (IST)








