» செய்திகள் - விளையாட்டு » அரசியல்
இந்தியா கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக ஆம் ஆத்மி அறிவிப்பு
திங்கள் 21, ஜூலை 2025 12:33:27 PM (IST)
இந்தியா கூட்டணியில் இருந்து ஆம் ஆத்மி வெளியேறி இருப்பது டெல்லி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
2024ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் பாஜக-வை தோற்கடிக்க எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா கூட்டணியை உருவாக்கியது. இந்த கூட்டணிக்கு காங்கிரஸ் தலைமை ஏற்றாலும், பாஜக-வை வீழ்த்தியே தீர வேண்டும் என்பதற்காக ஆம் ஆத்மி கட்சி இந்தியா கூட்டணியில் சேர்ந்தது.இந்தியா கூட்டணி 2024 மக்களவை தேர்தலுக்காக மட்டுமே அமைக்கப்பட்டது என அதில் இருந்த பெரும்பாலான கட்சிகள் தங்கள் கருத்துகளை தெரிவித்து வந்தன. இருந்தபோதிலும் பாராளுமன்ற கூட்டம் போன்றவற்றில் ஒருமித்த எதிர்ப்பை தெரிவிக்க காங்கிரஸ் இந்தியா கூட்டணி என்ற பெயரில்தான் ஆலோசனை கூட்டம் நடத்தி வந்தது.
இந்த நிலையில் தேசிய அளவில் இந்தியா கூட்டணியில் இருந்து ஆம் ஆத்மி கட்சி வெளியேறுவதாக, அக்கட்சியின் தேசிய தலைமை ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். இது குறித்து கட்சியின் மூத்த நிர்வாகி சஞ்சய்சிங் கூறுகையில் ; எங்கள் ஆம் ஆத்மியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் தெளிவாக உள்ளார். லோக்சபா தேர்தலை கருத்தில் கொண்டே இந்தியா கூட்டணி உருவானது. நாங்கள் இனி இந்த கூட்டணியில் இல்லை என கூறியுள்ளார்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் 21-ந் தேதி தொடங்குகிறது. ஆகஸ்டு 21-ந் தேதிவரை இத்தொடர் நடக்கிறது. இந்தநிலையில் இந்தியா கூட்டணியில் இருந்து ஆம் ஆத்மி வெளியேறி இருப்பது டெல்லி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அரசு மருத்துவமனைகளில் குறைகளைக் களைய 50 அதிகாரிகள் நியமனம்: சுகாதாரத்துறை அதிரடி!
சனி 11, ஜூலை 2026 12:06:38 PM (IST)

தவெக அரசு தமிழகத்திற்கு நல்லது செய்தால் வரவேற்போம்: அண்ணாமலை விளக்கம்!
திங்கள் 6, ஜூலை 2026 5:17:54 PM (IST)

திமுக முக்கியப் பிரமுகர் திருமண விழாவில் உதயநிதி ஸ்டாலின் - சீமான் திடீர் சந்திப்பு!
திங்கள் 6, ஜூலை 2026 4:49:59 PM (IST)

தமிழகத்தின் முதலமைச்சராக விஜய் தொடர்வார்: வைகோ நம்பிக்கை - திமுக மீது கடும் விமர்சனம்!
செவ்வாய் 30, ஜூன் 2026 3:47:32 PM (IST)

தமிழகத்தின் வளர்ச்சிதான் முக்கியம்; மத்திய அரசுடன் மோதலை விரும்பவில்லை: முதல்வர் விஜய் திட்டவட்டம்
புதன் 24, ஜூன் 2026 11:44:30 AM (IST)

தவெக அரசின் தொலைநோக்குப் பார்வையை ஆளுநர் உரை வெளிப்படுத்தியுள்ளது: வைகோ புகழாரம்!
வியாழன் 18, ஜூன் 2026 3:32:37 PM (IST)









dfriendSep 21, 2025 - 05:04:12 PM | Posted IP 162.1*****