» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

ராஜஸ்தானில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்: சச்சின் பைலட் நம்பிக்கை

சனி 25, நவம்பர் 2023 11:45:28 AM (IST)

ராஜஸ்தானில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் என்று  காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

ராஜஸ்தான் பேரவைத் தோ்தலில், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், ராஷ்ட்ரீய லோக் தாந்திரிக் கட்சி, பாரத பழங்குடியினா் கட்சி, ஆம் ஆத்மி, அகில இந்திய மஜ்லிஸ் கட்சி உள்ளிட்டவை களத்தில் உள்ளன. எனினும், ஆளும்கட்சியான காங்கிரஸ்-பிரதான எதிா்க்கட்சியான பாஜக இடையேதான் முக்கியப் போட்டி நிலவுகிறது.

மாநில அரசின் மக்கள் நலப் பணிகள் மற்றும் குடும்பத் தலைவிகளுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 உதவித் தொகை, ரூ.500 விலையில் சமையல் எரிவாயு சிலிண்டா், பழைய ஓய்வூதியத் திட்டம் போன்ற 7 முக்கிய வாக்குறுதிகளை முன்வைத்து, காங்கிரஸாா் பிரசாரத்தில் ஈடுபட்டனா்.

இந்த நிலையில், ராஜஸ்தான் சட்டப் பேரவைக்கு சனிக்கிழமை காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கி அமைதியாக நடைபெற்று வருகிறது. வாக்காளர்கள் தங்களது வாக்குரிமையை ஆர்வத்துடன் செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில், மாநிலத்தில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சியமைக்கும் என்று ராஜஸ்தான் முன்னாள் துணை முதல்வரும், காங்கிரஸ் தலைவருமான சச்சின் பைலட் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ராஜஸ்தானில் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆட்சி மாற்றம் வழக்கமாக உள்ள நிலையில், மக்களின் மனநிலை இந்த முறை அரசாங்கங்களை மாற்றும் போக்கை மாற்றும் என்றும், மாநிலத்தில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்.ஆட்சி அமைக்க தேவையான எண்ணிக்கையை நாங்கள் பெறுவோம். மாநிலத்தின் மக்கள் அதனை வழங்குபவார்கள் என்று சச்சின் பைலட் நம்பிக்கை தெரிவித்தார். 

மேலும் நாங்கள் கட்சிக்காக கூட்டாக தேர்தல் பணி செய்துள்ளோம். இது இரண்டு அல்லது மூன்று நபர்களைப் பற்றியது அல்ல. ராஜஸ்தானின் காங்கிரஸ் ஒன்றுபட்டுள்ளது என்று பைலட் தெரிவித்தார்.ராஜஸ்தான் பேரவைத் தோ்தலில் மொத்தம் 1,862 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா். அவா்களின் வெற்றி தோல்வியை சுமாா் 5.25 கோடி வாக்காளா்கள் நிா்ணயிக்க உள்ளனா். 

வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 3 ஆம் தேதி நடைபெறுகிறது.  2018 இல் காங்கிரஸ் 99 இடங்களையும், பாஜக 73 இடங்களையும் வென்றது. பிஎஸ்பி எம்எல்ஏக்கள் மற்றும் சுயேச்சை எம்எல்ஏக்கள் ஆதரவுடன் அசோக் கெலாட் முதல்வர் பதவியை ஏற்றார்.


மக்கள் கருத்து

KAMARAJAR THONDARKALNov 25, 2023 - 04:06:36 PM | Posted IP 172.7*****

உங்கள் குடும்பத்திற்கு இவ்வளவு வசதி போதாதா ? இன்னும் சம்பாதிக்கணுமா?

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital







Thoothukudi Business Directory