» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வரும் போதோல்லாம் தீவிரவாதம் தலை தூக்குகிறது: ஆர்.பி. உதயகுமார்

வெள்ளி 28, அக்டோபர் 2022 3:50:05 PM (IST)

தமிழ்நாட்டில், திமுக ஆட்சிக்கு வரும் போதோல்லாம் தீவிரவாதம் தலை தூக்குகிறது என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறியுள்ளார்.

மதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது: தேவர் தங்க கவச விவகாரத்தில் ஈ.பி.எஸ்.,க்கு எதிராக சூழ்ச்சிகள் செய்யப்பட்டது. பசும்பொன்னுக்கு எடப்பாடி பழனிசாமி வரக்கூடாது என சூழ்ச்சி நடந்துள்ளது. திமுக ஆட்சிக்கு வரும் போதோல்லாம் தமிழ்நாட்டில் தீவிரவாதம் தலை தூக்குகிறது. 

அதிமுக ஆட்சி காலங்களில் பயங்கரவாதம் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. திமுக இந்தி திணிப்புக்கு எதிராக நடத்தும் போராட்டம் மடை மாற்றும் செயல். தமிழை அதிமுக மட்டுமே பாதுகாத்து வருகிறது. தமிழுக்கு ஒரு பிரச்சினை என்றால் அதிமுக முதலில் நிற்கும். அரசின் மெத்தன போக்கினால் மழை நீர் வடிகாலில் செய்தியாளர் விழுந்து இறந்துள்ளார். வட கிழக்கு பருவ மழை முன்னேற்பாடுகளை தமிழக அரசு முறையாக செய்ய வேண்டும்" என  அவர் கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsArputham Hospital

Thoothukudi Business Directory