» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

யோசனைகளைச் சொந்த வணிகமாக மாற்றுவது எப்படி? - மகளிர் கல்லூரியில் வழிகாட்டல் நிகழ்ச்சி!

திங்கள் 3, ஆகஸ்ட் 2026 4:06:19 PM (IST)

தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் யோசனைகளை வணிகமாக மாற்றுதல் குறித்த வழிகாட்டல் நிகழ்ச்சி நடைபெற்றது. 

தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியின் நிறுவன புத்தாக்க மன்றம் (IIC) மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டுப் பிரிவு (EDC) ஆகியவை 'யங் இந்தியன்ஸ்' அமைப்புடன் இணைந்து, "ஒரு நிறுவனரைப் போல சிந்தியுங்கள்: யோசனைகளை வணிகமாக மாற்றுதல்" என்ற தலைப்பிலான வழிகாட்டல் நிகழ்ச்சி நடைபெற்றது. 

நிகழ்ச்சிக்குத் தொழில்முனைவோர் மேம்பாட்டுப் பிரிவு ஒருங்கிணைப்பாளர் முனைவர் எஸ். காயத்ரி வரவேற்புரையாற்றி நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். இதில் 'ஸ்டுடியோ சினிஸ்டா' நிறுவனத்தின் படைப்பாக்க இயக்குநர் மற்றும் இணை நிறுவனருமான வருண் அரவிந்த் சிறப்பு வளமுனைவராகக் கலந்து கொண்டார். 

அவர் மாணவர்களிடையே உரைநிகழ்த்துகையில்: தொழில்முனைவுச் சிந்தனையை வளர்த்துக் கொள்ளும் முறைகள், புதுமையான யோசனைகளை வெற்றிகரமான வணிகமாக மாற்றும் வழிமுறைகள், புதிய தொடக்க நிறுவனங்களுக்கான (Startups) வாய்ப்புகள், தலைமைத்துவத் திறன் மற்றும் புதுமையின் முக்கியத்துவம் குறித்துப் பல்வேறு பயனுள்ள கருத்துகளை மாணவர்களுடன் பகிர்ந்து கொண்டார்.

மாணவர்களிடையே தொழில்முனைவு மனப்பான்மை, புதுமைச் சிந்தனை மற்றும் தன்னம்பிக்கையை வளர்க்கும் வகையில் இந்நிகழ்ச்சி அமைந்தது. பல்வேறு துறைகளைச் சேர்ந்த மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு சிறப்பு விருந்தினருடன் கலந்துரையாடித் தங்களது சந்தேகங்களைத் தெளிவுபடுத்திக் கொண்டனர். இந்நிகழ்ச்சியின் மூலம் மொத்தம் 226 மாணவர்கள் பயனடைந்தனர். நிறைவாக ஏ. டேஃபடில் டி அல்மெய்டா நன்றியுரை ஆற்றினார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory