» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
நாசரேத் பாலிடெக்னிக் கல்லூரியில் ரத்ததான முகாம்
திங்கள் 22, செப்டம்பர் 2025 5:23:09 PM (IST)

நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் சி.எஸ்.ஐ. பாலிடெக்னிக் கல்லூரியில் ரத்ததான முகாம் நடைபெற்றது.
தூத்துக்குடி-நாசரேத் திருமண்டலத்தின் கீழ் இயங்கி வருகிற நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் சி. எஸ். ஐ. பாலிடெக்னிக் கல்லூரியில் நாட்டு நலப்பணி திட்டத்தின் சார்பாக ரத்ததான முகாம் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் கோயில்ராஜ் ஞானதாசன் வரவேற்றார். சிவில் துறைத் தலைவர் ரஞ்சன் ஆரம்ப ஜெபம் செய்தார். முகாமிற்கு கல்லூரி துறைத்தலைவர்கள் சோபியா பிரபாகர், பெனிட்டா ராஜு, சிவமுருகன், ஜான் வெஸ்லி, பிரபாகர் வேத சிரோமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த முகாமில் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி ரத்த வங்கி மருத்துவ அலுவலர் டாக்டர் வைதேஸ் தலைமையில், தென்திருப்பேரை வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் பார்த்திபன், உடையார் குளம் ஆரம்ப சுகாதார நிலைய சுகாதார ஆய்வாளர் ஞானராஜ் மற்றும் தூத்துக்குடி ரத்த வங்கி ஊழியர்கள சிறப்பாக நடத்தினர். இதில் 55 மாணவர்கள் கலந்து கொண்டு ரத்ததானம் செய்தனர். நிறைவாக கல்லூரி பர்சார் தனபால் நன்றியுரை நிகழ்த்தினார்.
இம் முகாமிற்கான ஏற்பாடுகளை கல்லூரியின் தாளாளரும், தூத்துக்குடி நாசரேத் திருமண்டலத்தின் நிர்வாக செயலாளருமா ன நீகர் பிரின்ஸ் கிப்ட்சன் தலைமையில் முதல்வர் கோயில்ராஜ் ஞானதாசன், நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் லிவிங்ஸ்டன் நவராஜ், பேராசிரியர்கள் மற்றும் நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

யோசனைகளைச் சொந்த வணிகமாக மாற்றுவது எப்படி? - மகளிர் கல்லூரியில் வழிகாட்டல் நிகழ்ச்சி!
திங்கள் 3, ஆகஸ்ட் 2026 4:06:19 PM (IST)

மர்காஷிஸ் கல்லூரியில் போதைப்பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி: நாசரேத் காவல் ஆய்வாளர் வனசுந்தர் பங்கேற்பு!
புதன் 1, ஜூலை 2026 7:59:13 PM (IST)

தருவைக்குளம் அரசுப் பள்ளியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி: மாணவர்களுக்கு அறிவுரை!
செவ்வாய் 30, ஜூன் 2026 11:44:24 AM (IST)

நாசரேத் மர்காஷிஸ் கல்லூரியில் போதைப்பொருள் ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி
வியாழன் 25, ஜூன் 2026 3:56:20 PM (IST)

கோவில்பட்டி எஸ்.எஸ்.டி.எம் கல்லூரியில் தேசிய வாசிப்பு வார விழா நிகழ்ச்சி!
வியாழன் 25, ஜூன் 2026 8:35:01 AM (IST)

தூய இஞ்ஞாசியார் மேல்நிலைப்பள்ளியில் சுற்றுச்சூழல் தினம் விழிப்புணர்வுப் பேரணி!
வெள்ளி 5, ஜூன் 2026 5:24:51 PM (IST)

