» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளி சாரணர் இயக்க மாணவர்களுக்கு பாராட்டு விழா!
புதன் 3, செப்டம்பர் 2025 3:58:30 PM (IST)

நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் சாரணர் இயக்க மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.!
நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப் பள்ளியில் பாரத சாரணர் இயக்கம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அதன் வாயிலாக, பல்வேறு செயல்பாடுகள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு சான்றிதழ்களும் கொடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, தஞ்சாவூர் அருகே பாப்பநாடு எம்எம்ஏ மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற கிழக்கு மண்டல திரளணியில் திருச்செந்தூர் சாரணர் கல்வி மாவட்டத்தின் சார்பில் நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் பங்கு பெற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
பங்கு பெற்ற மாணவர்களுக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் குணசீலராஜ் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார். நிகழ்ச்சியில், உதவி தலைமையாசிரியர் சார்லஸ் திரவியம், திருச்செந்தூர் கல்வி மாவட்ட சாரணர் இயக்க பொருளாளர் ஆபிரகாம் இம்மானுவேல், துணைச் செயலாளர் ஜெர்சோம் ஜெபராஜ், நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளி சாரணர் இயக்க பொறுப்பாசிரியர் ஸ்டீபன் பிரேம்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
திரளணிக்கான ஏற்பாடுகளை செய்த திருச்செந்தூர் கல்வி மாவட்ட பாரத சாரண, சாரணியர் இயக்க செயலாளர் சாமுவேல் சத்தியசீலனுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. சான்றிதழ்களைப் பெற்ற மாணவர்களை, தாளாளர் வழக்கறிஞர் பிரபாகர், பிற ஆசிரியர்கள், ஆசிரியைகள் மற்றும் அலுவலர்கள் பாராட்டினர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

காமநாயக்கன்பட்டி பள்ளி தலைமை ஆசிரியருக்கு பணி நிறைவு பாராட்டு விழா
வெள்ளி 1, மே 2026 8:21:17 PM (IST)

எட்டையபுரம் பள்ளி தலைமை ஆசிரியருக்கு பணி நிறைவு பாராட்டு
செவ்வாய் 28, ஏப்ரல் 2026 11:14:04 AM (IST)

அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியருக்கு பணிநிறைவு பாராட்டு விழா
திங்கள் 27, ஏப்ரல் 2026 8:38:16 PM (IST)

கோவில்பட்டி நாடார் காமராஜ் மெடரிக் பள்ளியில் தீண்டாமை ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்பு
வெள்ளி 30, ஜனவரி 2026 3:59:43 PM (IST)

தூத்துக்குடி சிவந்தாகுளம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் குடியரசு தின விழா
செவ்வாய் 27, ஜனவரி 2026 3:23:21 PM (IST)

ஆட்சியருக்கு பொங்கல் வாழ்த்து அஞ்சல் அட்டை அனுப்பிய பள்ளி மாணவ, மாணவிகள்!
திங்கள் 12, ஜனவரி 2026 5:32:56 PM (IST)


