» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் மரக்கன்று நடும் விழா
சனி 19, ஜூலை 2025 3:13:40 PM (IST)

நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் தேசிய பசுமைப் படையின் சார்பில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.
உதவி தலைமை ஆசிரியர் சார்லஸ் திரவியம் மரக்கன்றினை நட்டு வைத்தார். தேசிய பசுமைப் படை பொறுப்பாசிரியர் அம்புரோஸ் சுகிர்தராஜ் முன்னிலை வகித்தார். பள்ளி நுழைவு வாயிலின் அருகில் சிறப்பு வாய்ந்த செண்பக மரக்கன்று நடப்பட்டது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு, மரங்கள் வளர்ப்பதின் அவசியம் குறித்தும், வளர்ந்த மரங்களை பாதுகாப்பதின் முக்கியத்துவம் குறித்தும் எடுத்துக் கூறப்பட்டது.
மரக்கன்று நடுவதற்கான ஏற்பாடுகளை தாளாளர் பிரபாகர், தலைமையாசிரியர் குணசீலராஜ் வழிகாட்டுதலின்படி, பசுமை மன்ற பொறுப்பாசிரியர் ஜெர்சோம் ஜெபராஜ், விவசாய பிரிவு தொழிற்கல்வி ஆசிரியர் ஜெய்சன் பாபு ஆகியோர் செய்திருந்தனர். நிகழ்ச்சியில் ஓவியக்கலை ஆசிரியர் அலெக்சன் கிறிஸ்டோபர், உடற்கல்வி ஆசிரியர் தனபால், தேசிய மாணவர் படை அலுவலர் சுஜித் செல்வசுந்தர் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

யோசனைகளைச் சொந்த வணிகமாக மாற்றுவது எப்படி? - மகளிர் கல்லூரியில் வழிகாட்டல் நிகழ்ச்சி!
திங்கள் 3, ஆகஸ்ட் 2026 4:06:19 PM (IST)

மர்காஷிஸ் கல்லூரியில் போதைப்பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி: நாசரேத் காவல் ஆய்வாளர் வனசுந்தர் பங்கேற்பு!
புதன் 1, ஜூலை 2026 7:59:13 PM (IST)

தருவைக்குளம் அரசுப் பள்ளியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி: மாணவர்களுக்கு அறிவுரை!
செவ்வாய் 30, ஜூன் 2026 11:44:24 AM (IST)

நாசரேத் மர்காஷிஸ் கல்லூரியில் போதைப்பொருள் ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி
வியாழன் 25, ஜூன் 2026 3:56:20 PM (IST)

கோவில்பட்டி எஸ்.எஸ்.டி.எம் கல்லூரியில் தேசிய வாசிப்பு வார விழா நிகழ்ச்சி!
வியாழன் 25, ஜூன் 2026 8:35:01 AM (IST)

தூய இஞ்ஞாசியார் மேல்நிலைப்பள்ளியில் சுற்றுச்சூழல் தினம் விழிப்புணர்வுப் பேரணி!
வெள்ளி 5, ஜூன் 2026 5:24:51 PM (IST)

