» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
சுகாதார உதவியாளர் சான்றிதழ் வழங்கும் விழா
வியாழன் 1, மே 2025 7:51:10 PM (IST)

கோவில்பட்டியில் சுகாதார உதவியாளர் பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
செம்கார்ப் நிறுவனத்தின் சமூகப் பொறுப்பளிப்பு திட்டத்தின் கீழ் மாணவிகளுக்கு ஒரு மாத கால சுகாதார உதவியாளர் பயிற்சி வழங்கப்பட்டு பயிற்சி முடித்தவர்களுக்கு மருத்துவமனைகளில் வேலை வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சொர்ணா நர்சிங் கல்லூரியில் நடந்த சுகாதார உதவியாளர் பயிற்சியில் கலந்துகொண்டு பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் மருத்துவமனைகளில் பணிபுரிய பணி நியமன ஆணையும் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு நர்சிங் கல்லூரி தாளாளர் ஜெபின்ஜோஸ் தலைமை வகித்தார்.செம்கார்ப் நிறுவன மேலாளர் செல்வகுமார் கலந்து கொண்டு சுகாதார உதவியாளர் பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பணி நியமன ஆணைகளை வழங்கி பேசினார். இதில் கல்லூரி முதல்வர் சாந்திப்பிரியா, பைபால் ட்ரீ பவுண்டேசன் நிறுவன பணியாளர்கள் ஆதி, ரவிச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.சுகாதார உதவியாளர் பயிற்சியில் 200-க்கும் மேற்பட்ட மாணவிகள் பயிற்சி பெற்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

யோசனைகளைச் சொந்த வணிகமாக மாற்றுவது எப்படி? - மகளிர் கல்லூரியில் வழிகாட்டல் நிகழ்ச்சி!
திங்கள் 3, ஆகஸ்ட் 2026 4:06:19 PM (IST)

மர்காஷிஸ் கல்லூரியில் போதைப்பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி: நாசரேத் காவல் ஆய்வாளர் வனசுந்தர் பங்கேற்பு!
புதன் 1, ஜூலை 2026 7:59:13 PM (IST)

தருவைக்குளம் அரசுப் பள்ளியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி: மாணவர்களுக்கு அறிவுரை!
செவ்வாய் 30, ஜூன் 2026 11:44:24 AM (IST)

நாசரேத் மர்காஷிஸ் கல்லூரியில் போதைப்பொருள் ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி
வியாழன் 25, ஜூன் 2026 3:56:20 PM (IST)

கோவில்பட்டி எஸ்.எஸ்.டி.எம் கல்லூரியில் தேசிய வாசிப்பு வார விழா நிகழ்ச்சி!
வியாழன் 25, ஜூன் 2026 8:35:01 AM (IST)

தூய இஞ்ஞாசியார் மேல்நிலைப்பள்ளியில் சுற்றுச்சூழல் தினம் விழிப்புணர்வுப் பேரணி!
வெள்ளி 5, ஜூன் 2026 5:24:51 PM (IST)

