» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
தூத்துக்குடி திருச்சிலுவை ஆரம்பப் பள்ளியில் ஆண்டு விழா
ஞாயிறு 2, மார்ச் 2025 11:44:25 AM (IST)

தூத்துக்குடி வி இ சாலையில் அமைந்துள்ள திருச்சிலுவை ஆரம்பப் பள்ளியில் 111வது ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது.
விழாவிற்கு பள்ளியின் முன்னாள் மாணவர் தூத்துக்குடி மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்தார். வட்டார கல்வி அலுவலர் சரஸ்வதி மற்றும் முன்னாள் மாணவர் வக்கீல் விக்னேஷ் முன்னிலை வகித்தனர்.மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் பேசுகையில் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான சட்டங்கள், அரசின் புதுமைப்பெண், தமிழ் புதல்வன் திட்டங்கள் ,பள்ளி இடைநிற்றல் தடுத்தல், குழந்தைகளுக்கான அவசர உதவி எண் 1098 , போக்சோ சட்டம் மற்றும் பள்ளி குழந்தைகள் பாதுகாப்பிற்கான No - Go-Tell வழிமுறைகளை எடுத்துக்கூறி விழிப்புணர்வு சிறப்புரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட 700க்கும் மேற்பட்ட பள்ளி குழந்தைகள் மற்றும் பெற்றோர்களுக்கு குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை சார்பாக குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.பள்ளிக் குழந்தைகள் கலை நிகழ்ச்சிகள் நடத்தி காட்டினர்.நிகழ்ச்சி ஏற்பாடுகளை பள்ளி தலைமை ஆசிரியை அருட் சகோதரி ரீட்டா , பள்ளி நிர்வாகி அருட்சகோதரி மலர் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

யோசனைகளைச் சொந்த வணிகமாக மாற்றுவது எப்படி? - மகளிர் கல்லூரியில் வழிகாட்டல் நிகழ்ச்சி!
திங்கள் 3, ஆகஸ்ட் 2026 4:06:19 PM (IST)

மர்காஷிஸ் கல்லூரியில் போதைப்பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி: நாசரேத் காவல் ஆய்வாளர் வனசுந்தர் பங்கேற்பு!
புதன் 1, ஜூலை 2026 7:59:13 PM (IST)

தருவைக்குளம் அரசுப் பள்ளியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி: மாணவர்களுக்கு அறிவுரை!
செவ்வாய் 30, ஜூன் 2026 11:44:24 AM (IST)

நாசரேத் மர்காஷிஸ் கல்லூரியில் போதைப்பொருள் ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி
வியாழன் 25, ஜூன் 2026 3:56:20 PM (IST)

கோவில்பட்டி எஸ்.எஸ்.டி.எம் கல்லூரியில் தேசிய வாசிப்பு வார விழா நிகழ்ச்சி!
வியாழன் 25, ஜூன் 2026 8:35:01 AM (IST)

தூய இஞ்ஞாசியார் மேல்நிலைப்பள்ளியில் சுற்றுச்சூழல் தினம் விழிப்புணர்வுப் பேரணி!
வெள்ளி 5, ஜூன் 2026 5:24:51 PM (IST)

