» கல்வி / வேலை » வேலைவாய்ப்பு (தூத்துக்குடி)
மீன்வளத் துறையில் பணியிடங்கள் : ஆட்சியர் தகவல்
சனி 21, ஜூன் 2025 7:36:44 PM (IST)
தூத்துக்குடி மாவட்ட மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையில் சாகர் மித்ரா பணியாளராக பணிபுரிந்திட விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார்.
பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பல்நோக்கு சேவை ஊழியர்களாக தூத்துக்குடி மாவட்டம் வீரபாண்டியபட்டணம் மீனவ கிராமத்தில் ஒப்பந்த அடிப்படையில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையில் சாகர் மித்ரா பணியாளராக பணிபுரிந்திட 01.07.2024 அன்றைய தேதியில் 35 வயது நிறைவடையாத மீன்வள அறிவியல் ( Fisheries Science ) / கடல் உயிரியல் (Marine Biology) / விலங்கியல் ( Zoology) பட்டப்படிப்பு / பன்னிரெண்டாம் வகுப்பில் அறிவியல் பாடத்தில் தேர்ச்சி பெற்று வீரபாண்டியபட்டணம் மீனவ கிராம சுற்று வட்டாரப்பகுதியில் வசித்து வரும் தகுதியான நபர்கள் 30.06.2025 அன்றைய தினத்திற்குள் விண்ணப்பித்திட அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மேலும் விவரங்களுக்கு உதவி இயக்குநர் அலுவலகம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, வடக்கு கடற்கரை சாலை, மீன்வளத்துறை வளாகம், தூத்துக்குடி என்ற முகவரியில் வாரவேலை நாட்களில் நேரில் தொடர்புகொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
Kaleeswari.kJun 22, 2025 - 12:15:35 PM | Posted IP 172.7*****
..
Kaleeswari.kJun 22, 2025 - 12:15:35 PM | Posted IP 172.7*****
..
மேலும் தொடரும் செய்திகள்

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் பணியிடங்கள்: ஜன.31க்குள் விண்ணப்பிக்கலாம்!
வெள்ளி 23, ஜனவரி 2026 8:11:54 AM (IST)

ரயில்வே துறையில் 22 ஆயிரம் காலிப்பணியிடங்கள்: பிப்ரவரி 20க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!
வெள்ளி 26, டிசம்பர் 2025 4:35:08 PM (IST)

எஸ்பிஐ வங்கியில் 996 காலிப்பணியிடங்கள்: விண்ணப்பிக்க கடைசி தேதி டிச.23!
சனி 6, டிசம்பர் 2025 12:02:37 PM (IST)

அஞ்சல்துறை வங்கியில் 348 பணி இடங்கள்: அக்.29க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு
வியாழன் 23, அக்டோபர் 2025 4:09:02 PM (IST)

7,565 கான்ஸ்டபிள் காலிப்பணியிடங்கள்: எஸ்.எஸ்.சி., அறிவிப்பு!
வியாழன் 25, செப்டம்பர் 2025 12:48:27 PM (IST)

தமிழக காவல்துறையில் 3665 பணி இடங்கள் : செப்.21 வரை விண்ணப்பிக்கலாம்..!
வெள்ளி 19, செப்டம்பர் 2025 12:55:39 PM (IST)



Kaleeswari.kJun 22, 2025 - 12:15:35 PM | Posted IP 104.2*****